கேரளாவில் வெள்ளம்! முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டிய சூர்யா

0

பேய் வெள்ளம் சூழ்ந்திருக்கிறது கேரளாவில்! கொச்சி, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் போன்ற ஊர்களில் உள்ள பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் வீடு இழந்து தவிக்கிறார்கள். மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கும் இந்த நேரத்தில், மாநில அரசு பார்த்துக் கொள்ளும். மத்திய அரசு தேற்றிக் கொள்ளும் என்று நினைக்காமல் அவரவர் சக்திக்கு அவரவர் கை நீட்டுவதே சால சிறந்தது என்று நினைத்திருக்கிறார்கள் நடிகர்கள்.

அதுவும் தமிழகத்திலிருந்து நீளும் முதல் நம்பிக்கை, நம்ம சூர்யாவின் கை! உடனடியாக 25 லட்சம் நிவாரண நிதி தருவதாக அறிவித்திருக்கிறார் அவர்.

இதை தொடர்ந்து கமல்ஹாசன் 25 லட்சத்தையும், விஜய் தொலைக்காட்சி 25 லட்சத்தையும் வழங்கியிருக்கிறது. இந்த உதவிக்கரம் நீளும் என்பதே இப்போதைய நம்பிக்கை.

கேரளாவில் கமல், சூர்யா, கார்த்தி படங்கள் மட்டுமல்ல. விஜய் அஜீத் விக்ரம் படங்களுக்கும் நல்ல கிராக்கி இருக்கிறது. அப்படியென்றால் அவர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள் அல்லவா? நீட்டணும்… என்ன நடக்குதோ, பார்க்கலாம்!

Leave A Reply

Your email address will not be published.