தொடர் பிளாப்! தரையில் நடக்கும் சிவகார்த்திகேயன்!

4

எடுத்த எடுப்பிலேயே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் என்ற ஆசை இன்று சினிமாவில் ஓரளவுக்கு கைதட்டல் வாங்கிவிடுகிற எல்லார் மனசிலும் வந்துவிடுகிறது. அட்லசின் தோளில் ஏற்றப்பட்ட உலக உருண்டை, ஏ.வி.எம் ஸ்டூடியோவில் இறக்கி வைக்கப்பட்டது போல, விலைமதிப்பற்ற இந்த சி.எம். கனவு இவர்களைப் போன்ற நடிகர்களின் மண்டையில் இறக்கி வைக்கப்பட்டுள்ளது! இதுதான் தமிழர்களின் தலைவிதி.

நானே ரஜினி, நானே அஜீத், நானே விஜய், நானே எல்லாம் என்று நம்பிக் கொண்டிருக்கும் இன்னொருவர் நம்ம சிவகார்த்திகேயன். மீடியாக்கள் தொடுகிற தொலைவில் அவர் இருந்ததே இல்லை. ஒரு உதாரணம் சொல்லலாம். வேலைக்காரன் ரிலீஸ் சமயத்தில் நடந்த சம்பவம் இது.

அவரது பி.ஆர்.ஓ வான ரேகா ஒரு முன்னணி யு ட்யூப் சேனலுக்கு போன் செய்தார். “சிவகார்த்திகேயன் சார் உங்களுக்கு பேட்டி தர்றதா சொல்லியிருக்கார். ஆனா ஐந்தே நிமிஷம்தான் டைம். அவர் நடிக்கிற சினிமா தவிர வேறு எதையும் கேள்வியா கேட்கக் கூடாது. ஒக்கேன்னா சொல்லுங்க”

சற்றே ஜெர்க் ஆன யு ட்யூப் சேனல், “அவரு பேட்டிய அவரையே வச்சுக்க சொல்லுங்கம்மா” என்று கூறி தொடர்பை துண்டித்தது. அந்த படம் படு பிளாப். அதற்கப்புறம் வந்த சீமராஜா அதைவிட பெரிய பிளாப். இப்படியாக தன் வெற்றிப்பயணத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும்(?) சிவகார்த்திகேயன், இப்போதெல்லாம் ஸ்டார் ஓட்டல் தவிர வேறு சாதாரண இடங்களில் நடக்கும் பிரஸ்மீட்டுகளில் கூட கலந்து கொள்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

“நான் மீடியாவை விட்டு வெகு தூரமெல்லாம் போகல. இங்கதான் இருக்கேன். எப்ப வேணா கூப்பிடலாம்” என்று அங்கு தன்னிடம் கை குலுக்கிய நிருபர்களிடம் கூறி ஷாக் கொடுத்தார் சிவா.

றெக்கை தீப்பிடிச்சா, ரன்வேதான் முதல்ல கண்ணுக்கு தெரியும் விமானிக்கு. உங்களை இன்னும் பட்டை தீட்டறதுக்காகவாவது இன்னும் நாலைஞ்சு பிளாப் கொடுங்க ப்ரோ!

4 Comments
 1. […] […]

 2. Prabhu says

  தல மற்றும் தளபதி இனிமேல் சிவா தாண்டா . அஜித் விஜய் எல்லாம் தோல்வி .
  மிஸ்டர் லோக்கல் படம் மாபெரும் வெற்றி படம் . நீ என்ன தான், தளபதி சிவாவிற்கு எதிராக குவினாலும், மக்கள் செல்வாக்கு பெற்ற தல எங்கள் சிவா தாண்டா .

 3. Velu says

  தொடர்ந்து மூணு படம் பிளாப். தம்பி சிவா உன் ஜோலி கோடம்பாக்கத்துல முடிச்சு போச்சு. இன்னம் ஒரு மூணு பிளாப் தொடர்ந்து நடிப்ப. மொத்தம் தொடர்ச்சியா ஆறு பிளாப் ஆனப்புறம் கோடம்பாக்கத்துல இருந்து மொத்தமா சங்கு ஊதிருவாங்க. பிரசாந்த் கதி தான் உனக்கும். ரொம்ப ஆடினால் இது தான் கதி.

  1. JOSEPH VIJAY says

   அஜித்தும் விஜயின் கொடுக்காத தோல்வியா ??? இந்த இருவரும் தான் தொடர் தோல்வி நாயர்கள் .
   விஜய் அஜித்தை விட சிவா தான் சிறந்த நடிகர். விஜய் அஜித் இருவரும் மொக்கை படங்கள் தான் நிறைய கொடுத்து உள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.