வருங்கால சீஃப் மினிஸ்டர்! உதயநிதியை அறிவித்த டைரக்டர்!

0

“ஷுட்டிங் ஸ்பாட்ல நான் வணக்கம் வைக்க மறந்துட்டேன். ஆனால் என்னை தேடி வந்து வணக்கம் வச்சுட்டு போனார். நான் அப்படியே அசந்துட்டேன்” என்று பிரபல இயக்குனர் ஜி.எம்.குமார் வாயால் பாராட்டுகளை அள்ளிக் கொண்டார் உதயநிதி ஸ்டாலின். பாராட்டு அதோடு நின்றதா என்றால் அதுதான் இல்லை. எஸ்.எழில் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் பிரஸ்மீட் பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. விழாவுக்கு வந்திருந்த அத்தனை பேரும் தமிழ்நாட்டின் பெரிய குடும்ப வாரிசான உதயநிதியின் எளிமையையும் அமைதியையும் சொல்லி சொல்லி வியந்தார்கள்.

அவரும் சும்மா இல்லை. அந்த படத்தில் நடித்த நண்டு சுண்டைக்காய் சுரைக்காயையெல்லாம் மேடையில் ஏற்றி பேச வைத்தார். யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்கிற அந்த நல்ல மனசுக்கு பிரஸ் சைடிலிருந்து கூட பெரிய அப்ளாஸ். போகட்டும்… இந்த செய்தியின் தலைப்புக்கு வருவோம்.

இயக்குனர் ஜி.எம்.குமார் மேலும் பேசும்போது, “நான் உதயநிதிக்கு கை கொடுக்கும் போது ஒரு விஷயத்தை மனசுல நினைச்சுகிட்டேன். இப்ப நாம கை குலுக்கறது வருங்கால சீஃப் மினிஸ்டருக்குன்னு. இன்னும் இருபது வருஷம் கழிச்சு நான் உயிரோட இருந்தா, அந்த சம்பவத்தை நினைச்சு பார்ப்பேன்” என்றார். இதற்கு மேடையிலிருந்த உதயநிதி முகத்தில் ஒரு ரீயாக்ஷனும் இல்லை. ஏன்?

அவர்தான் தெரிந்தே ஸ்டெப் வைக்கிறாரே? இந்தப்படத்தில் பல காட்சிகளில் அவர் கருப்பு சிவப்பு சட்டையுடன் உலா வந்து அரசியல் விமர்சன டயலாக்குகளை பேச ஆரம்பித்திருக்கிறார்.

உலகம் இன்னொரு ஹிஸ்ட்ரியை எழுத போகிறது. அதற்கு இங்க் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் சினிமா மூலம்!

Leave A Reply

Your email address will not be published.