கௌதம் மேனனை மயக்கிய இசையமைப்பாளர்.

புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் இசையமைப்பாளர் இஷான் தேவ். சாரல், பட்டினப்பாக்கம், மிக மிக அவசரம் படங்களும் இஷான்தேவ் இசையில் வெளியாக உள்ள படங்கள். தவிர விஷால் ஆந்தம், இயக்குநர் சேரன் வரிகளில் நீட் தேர்வு முறையால் பலியான அனிதாவிற்கு சமர்ப்பணம் செய்த “பெண்ணிற்கோர் கொடுமை செய்தோம்“ பாடல்களும் இஷான் தேவ் இசையில் உருவானவை தான்.

என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்களைக் கேட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தன் ஒன்றாக இசை நிறுவனத்தின் சார்பாக அதை வெளியிட்டார். ஒன்றாக யூடியூப் சேனலில் “இரவில் வருகிற திருடன் போலவே” பாடல் செம ட்ரெண்ட் அடித்தது.

கயல் ஆனந்தியில் கால்களைச்சுற்றித்தான் என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் கதை, காதல் எல்லாம். படத்தின் முதல் போஸ்டராக இஷானுக்கு டைரக்டர் ஜெகன் காட்டியது அழகான செருப்புகள் அணிந்த கயல் ஆனந்தியின் கால்களைத்தான். ஆகையால் கதாநாயகியின் முகம் தெரியாமல் கால்களை ரசித்துத்தான் பாடல்களுக்கு மெட்டமைத்தார் இஷான். விஜய ஸாகர் வரிகளில் படம் வெளியாகும் முன்னமே ஹிட்டானது. பாடல்கள். படம் வெளியான பின் இன்னும் பலர் பாடல்களுக்காக தனியாக பாராட்டுகிறார்கள்.

இரவில் வருகிற திருடன் போலவே, அபிமானியே என இரண்டு மெலடி பாடல்களும், நடிகர் சிம்பு பாடிய “என் ஆளோட செருப்பக்காணோம்” பாடலும் என வெரைட்டியாக இருக்கிறது பாடல்கள். அதிலும் பாடல் முழுவதும் 3 நோட்ஸில் இசையமைத்துள்ள, ச ரி பா…. செருப்பு ….பாடல் இன்னும் பரவலான வரவேற்றைப்பெற்றுள்ளது.

சாரல், திருப்பதிலட்டு, மிக மிக அவசரம், பட்டினப்பாக்கம், கத்திரிக்கா வெண்டக்கா உள்பட பல படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார் இஷான் தேவ். என் ஆளோட செருப்பக் காணோம் படத்தின் பாடல்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள மகிழ்ச்சியியோடு கூட புதிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகளும் வரத்தொடங்கி இருப்பதில் உற்சாகமாக இருக்கும் இஷான் தேவ், விருதுகள் பெற்ற பாடகரும் கூ

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Discussion About Tamilisai Soundararajan Restaurant Visit!

https://www.youtube.com/watch?v=g6Nsd7hdYac&t=2s

Close