சமுத்திரக்கனி இல்லேன்னா நான் இங்க இல்ல! கவுதம் மேனன் பளிச்!

0

படவாய்ப்பு இல்லாட்டாலும் கவலையில்ல. ஒரு டைரக்டர் இன்னொரு டைரக்டருக்கு கை கொடுக்கிற காலம் இது. அதெப்படி? வாய்ப்பில்லாத அந்த டைரக்டரை தன் படத்தில் நடிக்க வைப்பார்கள். ஆனால் மார்க்கெட்டில் உச்சத்திலிருந்தாலும், நட்புக்காக நடிக்க வந்த ஒரு சிலரில் கவுதம் மேனனும் ஒருவர்.

கோலிசோடா 2 ல் கவுதம் மேனனுக்கு செம ரோல். முதலில் பத்து நிமிஷம். கடைசியில் பத்து நிமிஷம். ஆனால் மனுஷன் கலக்கியிருக்கிறாராம். எப்படி இந்த படத்திற்குள் வந்தார் கவுதம்? இந்த நல்வரவை அவரை வைத்துக் கொண்டே சொன்னார் கோலிசோடா2 ன் இயக்குனர் விஜய் மில்டன்.

இப்படியொரு படம் எடுக்கணும்னு முடிவு பண்ணியவுடன், சமுத்திரக்கனியைதான் கேட்டேன். “சார் என் படத்தில் நடிக்கணும். எவ்வளவு சம்பளம்” என்று. அவரோ, “என்னங்க சம்பளமெல்லாம் பேசிகிட்டு இருக்கீங்க? கொடுக்கறதை கொடுங்க” என்றார். சத்தியமா சொல்றேன். இன்னும் அவருக்கு ஒரு பைசா கூட கொடுக்கல. இந்தப்படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார்னு தெரிஞ்சதும்தான் கோலிசோடா2 க்கு ஒரு எதிர்பார்ப்பே வந்திச்சு என்றார்.

அதற்கப்புறம் முக்கியமான கேரக்டரில் நடிக்க கவுதம் மேனனை தொடர்பு கொண்டாராம். “வேற யாரெல்லாம் நடிக்கிறாங்க?” என்று கேட்ட கவுதமுக்கு, “சமுத்திரக்கனி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. அப்புறம்? “அது போதும். நானும் இந்தப்படத்தில் இருக்கேன்” என்று கூறியிருக்கிறார் கவுதம்.

ஓடுறவன் திருப்பி அடிச்சா என்னாகும் என்பதுதான் கதை. கோலிசோடா முதல் பகுதியில் வந்த விடலைப்பசங்க, இன்று வாலிபர்கள் ஆகி நின்றால் எப்படியிருக்கும்? இதைதான் சூடும் சுவையுமாக படைத்திருக்கிறார் விஜய் மில்டன். இவரது தம்பி பரத் சீனுவுடன் மேலும் இரண்டு இளைஞர்கள் அறிமுகமாக, அதிரடி சண்டைக்காட்சிகளுடன் ரிலீசுக்கு தயாராகியிருக்கிறது கோலிசோடா2.

இம்மாதம் 14 ந் தேதி பொங்கப் போவுது சோடா! தில் இருந்தா வாடா!!

Leave A Reply

Your email address will not be published.