ஆட்டையும் அவுத்து வுடு… செடியையும் பிழைக்க வுடு… கவுதமியின் பலே ஆட்டம்!

0

சென்சார் போர்டு அதிகாரியாகவும் இருக்கிறார் கவுதமி. ஆனால் பொறுப்பான அதிகாரியா என்றால் போற வர்ற மாடு கன்னுக்குட்டி கூட, ‘ஐயே ஆத்தா’ன்னு கத்தும்! ஏன்? சமீபத்தில் வந்த ஆபாச குப்பையான ‘90 எம்.எல்’ படம் வெளிவரக் காரணமே கவுதமிதான். ‘இதுக்கெல்லாம் அனுமதியில்ல… ரிவைசிங் கமிட்டி முடிவு பண்ணட்டும்’ என்று கவுதமி பக்கம் தள்ளிவிட்டது ஆரம்ப நிலை சென்சார். அதற்கப்புறம் தன் கைக்கு வந்த படத்தை தாராளமாக அனுமதித்ததே கவுதமிதான். கட்… இப்ப என்ன அதுக்கு?

ஒரு இணையதளத்தில் பேட்டியளித்திருக்கிறார் கவுதமி. அங்கு கேட்கப்பட்ட கேள்வி இதுதான். சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்கு காரணம் சினிமாவா? இதற்கு பதிலளித்த கவுதமி, “சமூகத்தில் நடக்கிற குற்றச் சம்பவங்கள் பலவற்றுக்கும் சினிமா ஒருவகையில் காரணமா இருக்குது. அதை ஏத்துக்கிறேன், ஆனால், சினிமாதான் தூண்டுகோல் என்பதை நான் ஏத்துக்க மாட்டேன். சினிமாவில் நிறைய நல்ல விஷயங்களையும் சொல்றாங்க, அதைப் பார்த்து பயனடைந்தவர்களும் இருக்கிறார்கள். அதையும் வெளிப்படையா சொல்லலாமே!” என்று கூறியிருக்கிறார்.

ஒரு பக்கம் ஆட்டையும் அவிழ்த்து விடுறது. இன்னொரு பக்கம் செடியையும் பிழைக்க விடுறதுன்னு இருந்தா எப்படிங்க? நடக்குற விஷயமா அது?

Leave A Reply

Your email address will not be published.