பிராப்ளம் ஆன பிக்பாஸ்! கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா!

1

சிக்கன் பாக்ஸ்சை கூட பொறுத்துக் கொள்ளலாம். இந்த பிக் பாஸ் தருகிற அரிப்பைதான் தாங்கவே முடியவில்லை ஜனங்களால்! மற்ற மற்ற தொலைக்காட்சி விவாதங்கள் கூட அந்த நேரத்தில் பல்லிளிக்கிற அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை. வீட்டுக்கு வீடு, வெறிக்க வெறிக்க நேசிக்கும் புரோகிராம் ஆகிவிட்டது அது.

முதலில் ஜாலியாக உள்ளே போன அத்தனை பேரும் விட்டால் போதும் என்று ஓடி வருகிற நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் பிக் பாஸ் வீட்டில். ஏன்? சொந்தங்களும் நட்புகளும் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே நின்று கதறினால் கூட, உள்ளே இருக்கும் பிரபலங்களுடன் அவர்களை சந்திக்க விட்டால்தானே? போகட்டும்… அதுவல்ல பிரச்சனை. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வீட்டுக்குப் போய்விட்டார்கள் காயத்ரியின் அம்மாவும், டான்ஸ் மாஸ்டர் கலாவும். உள்ளே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்.

“உங்களை நம்பிதான் என் பெண்ணை அனுப்பினேன். ஆனால் அவளை நீங்களே அசிங்கப்படுத்திட்டீங்க. அவ கால்சியம் குறைபாடுன்னு சாப்பிட்ட மில்க் பவுடர் உங்களுக்கு பெரிய விஷயமா போச்சா? அதை காட்டாம தவிர்த்திருக்கலாமே?” என்று கூப்பாடு போட்டாராம் காயத்ரியின் மம்மி. கூடவே போன கலாவும் தன் பங்குக்கு கண்ணீர் வடிக்க… செய்வதறியாமல் நின்ற கமல், அப்புறம் மெனக்கெட்டு விளக்கினாராம்.

“அந்த நிகழ்ச்சியின் போக்கு என் கையில் இல்லை. கிரியேட்டிவ் டீம் தருகிற விஷயங்களை நான் தொகுத்து பேசுகிறேன். அதில் இவ்வளவுதான் என் பங்கு” என்று சொன்ன பிறகும் நம்பவில்லையாம் தி கிரேட் மம்மி. இதை தொடர்ந்துதான் காயத்ரியின் ஹேர் பேச்சுக்கும், வெளியே வா. வச்சுக்குறேன் என்ற மிரட்டலுக்கும் அதிக ரியாக்ஷன் காட்டாமல் விட்டுவிட்டாராம் கமல்.

அடுத்த முறையும் ஆழ்வார்ப்பேட்டை ரணகளப்பட்டால் என்னாவது என்கிற அச்சம்தான் காரணம் போல!

1 Comment
  1. Ramani says

    Thai pola illai noolai pola chelai

Leave A Reply

Your email address will not be published.