நல்லவேளை… சீமான் கைதாகவில்லை! இல்லேன்னா காலா கதி?

4

தென்னை மரத்தில் சுண்டைக்காய் காய்த்தது போல, படு சுமாராக ஒரு ட்விட் போட்டு ஊராரின் கோபத்தை வாங்கிக் கொண்டார் ரஜினி. நீதி தவறா நெறிமுறை காவலர்களாக விளங்கும் தமிழக காவல் துறை பற்றிய வக்காலத்துதான் அது. அவர் போலீசுக்கு ஆதரவாக போட்ட ட்விட் பற்றி பிரச்சனையில்லை. அதே ட்விட்தான் சீமான் மீது கொலை முயற்சி வழக்கு போடவே காரணமாக இருந்ததாக கூறுகிறார்கள் நாம் தமிழர் இயக்கத்தினர்.

இந்த நிலையில்தான் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி கவனத்தை ஈர்த்தது சீமான் தலைமையிலான கருஞ்சிறுத்தைக் கூட்டம். சென்னை ஏர்போர்ட் வளாகமே கருப்பு புயல் அடித்தது போல காணப்பட, அந்தரத்தில் பறந்து ஆகாச மார்க்கமாக மாமல்லபுரம் போய் சேர்ந்தார் பிரதமர்.

அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அன்று காலையில் போலீசாரால் கொண்டு செல்லப்பட்ட சீமான், பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்ட பெரும் கூட்டம், பல்லாவரத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டது. மாலை ஐந்து மணி வாக்கில்தான் அந்த திடீர் அமளி. இன்னும் சிறிது நேரத்தில் சீமான் கைது செய்யப்படவிருக்கிறார் என்பதுதான் அது.

கொதித்துப்போன சீமானின் தம்பிகள், அங்கேயே கோஷமிட ஆரம்பித்தார்கள். அதில் முக்கியமானது ஒன்று.

‘எங்க அண்ணனை ஜெயிலுக்கு அனுப்பக் காரணமான ரஜினியே… உங்க காலா திரைக்கு வருதா பார்க்கலாம். வந்தாலும் அது எப்படி ஒடுதுன்னு பார்ப்போம்’ என்று போர்க்குரல் இட… பலருக்கும் ஷாக்.

அதுவா வந்து… அதுவா போகப் போற படத்தை, சீமான் ஒரு வருஷம் ஓட வச்சுட்டா? என்பதுதான் அந்த ஷாக்! இருந்தாலும் சீமானின் படைக்கு இருக்கிற வேகம், காலாவை பொசுக்கினாலும் ஆச்சர்யமில்லை.

4 Comments
 1. கிரி says

  அந்தணன் உங்கள் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் குலைத்து விட்டீர்கள்.

  ரஜினியை எதிர்க்க வேண்டும் என்ற முடிவை எடுத்து விட்டீர்கள்! மற்ற தளங்களை போல நீங்களும் அவர்களுடன் கை கோர்த்து விட்டீர்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது.

  உங்களுக்கு இடைப்பட்ட கட்டளையை / வேண்டுகோளை சிரமேற்கொண்டு நிறைவேற்றி வருகிறார்கள்.

  இதனால் உங்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும் ஆனால், உங்கள் மனசாட்சியை கேட்டுப்பாருங்கள். அது உங்களை என்ன கூறுகிறது என்று.

  ஒரு காலத்தில் இது போல கேவலமான வேலையை செய்ய ஒத்துக்கொண்டதற்காக நிச்சயம் வருத்தம் மற்றும் குற்ற உணர்வு அடைவீர்கள்.

  கர்மா வின் பலம் மிகப்பெரியது அந்தணன். தற்போது நீங்கள் தப்பித்தாலும் ஒரு காலத்தில் இதற்கான தண்டனையை பெறுவீர்கள்.

  ஊடக தர்மம் என்பதை பெரும்பாலான ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் குழி தோண்டி புதைத்து விட்டீர்கள்.

  நாங்க ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.. கர்மாவே வந்து உங்கள் முன் நிற்கும், அப்போது புரியும்.

  நன்றி வணக்கம்.

 2. ramanayagan says

  தமிழன் இளிச்சவா ஏமாளி சார். காலா வரட்டும், ஆயிரம் ஐஆயிரம்ம்னு காலா டிக்கெட்டை தமிழன் போட்டி போட்டு வாங்க தான் போறான். ரஜினி காசை எண்ணி கர்நாடகாவுல பினாமி பேருள இன்வெஸ்ட் பண்ணத்தான் போறான். சீமான் ஒரு வேத்தி வாய், என்ன காவிரி தண்ணிய வாங்கி கொடுத்தரவா போறான். அவனே ஒரு 500 பேர் வச்சிக்கிட்டு படம் காட்டி NRI டொனேஷன் அண்டர் டேபிள் டொனேஷன்னு ஒட்டிக்கிட்டு இருக்கான். ரெண்டுமே அதுதான் சார்ரே.

 3. Tamilian says

  I agree with Giri. Andanan guy has got some agenda to write against the Rajini thereby not telling the truth. Is Andanan encouraging violence? How could you justify party cadres attacking police men.

  Andanan not only writing the truth abut clearly showing his corrupted Journalidm towards Gundas. Long live his Journalism

 4. பாத்திமா பேகம் says

  சைமன் செபாஸ்டியனே,
  உன்னால் முடிந்தால் தடுத்து பாருடா காலாவை.
  தமிழக மக்களின் காவலன் எங்கள் காலா
  உன்னை போன்ற துரோகிகளுக்கு எங்கள் காலா தாண்டா காலன்

  சமூகவலைத்தளங்களில் நடந்த வன்முறையை பல வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள்… நிச்சயம் இவர்கள் காவேரிக்காக போராடவில்லை, வன்முறை தீவிரவாதத்தை தமிழகத்தில் வளர்க்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் அதனால் தான் சொந்த மாநில மக்களையே அடித்து இருக்கிறார்கள்.
  தமிழக மக்கள் ஒருபோதும் வன்முறையை ஏற்கமாட்டார்கள். உண்மையான தமிழ் உணர்வு உள்ளவர்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள்.

  கிரிக்கெட் பார்க்க சென்ற பெண்களை தரக்குறைவாகவும், ரசிகர்களை நீங்கள் தாக்கியதால் தானே காவல்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுத்தது. அதை மூடி மறைத்து விட்டு காவல்துறை உங்கள் மீது தடியடி நடத்தியது என்பது போல் ஏன் பொய் பேசுகிறீர்கள்.

  உங்களின் போராட்டம் காவேரிக்காக இல்லை, காவேரி பெயரை சொல்லி தமிழகத்தில் வன்முறை தீவிரவாதத்தை தூண்டுவது தான் உங்களின் நோக்கமாக இருக்கிறது.
  திராவிட ஆதரவாளர்கள் எல்லாம் பெங்களூருக்கு சென்று காவேரி நீரின் தமிழகத்தின் பங்கை உரிமையோடு கேட்டு வாங்குங்கள். பார்க்கலாம். அதை விட்டுவிட்டு சும்மா வாயில வடை சுட கூடாது.

  சைமன் தமிழ் நாட்டை சுடுகாடு ஆக்காமல் ஓயமாட்டார் என நினைக்கிறேன் .. இளைஞர்களை தவறான பாதையில் வழி நடத்துகின்றனர் .
  இவரை நன்றாக சுளுக்கெடுக்க வேண்டும்…..

  இந்த இயக்குனர் எல்லாம் மார்க்கெட்இழந்தவர்கள் இவர்களின் ஒரு படம் கூட ஓடுவதில்லை IPL நடந்தால் வசூல் பாதிக்கும் என கிளம்பிட்டாங்க
  எது போராட்டம்? பீச் fulla கரண்ட் cut பண்ணாவோடனே தன் கையில் இருந்த செல்போன் எடுத்து வெளிச்சம் பாச்சி தோளோடு தோள் நின்ற பெண்களை தெய்வமா மதிச்ச ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு போராட்டம்.ஆனால் என்ன நடந்தது நேற்று? ஒரு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போன அப்பாவி மக்களை அடிச்சு, லைன்ல நின்ற பெண்களை அசிங்க அசிங்கமா பேசி, போலீலை வெறித்தனமா தாக்கி நடந்தது போராட்டம்
  திராணி இருந்தால் காவேரி இருக்கும் பெங்களூருவை நோக்கி பேரணியை நடத்த சொல்லு.

Leave A Reply

Your email address will not be published.