ஜி.எஸ்.டி வரி! ரஜினியின் கள்ள மவுனம்?

5

ஆம்புலன்ஸ் பட்டனை அழுத்தினால் கூட, காலிங்பெல் நிதானத்தோடுதான் கதவை திறப்பார் போலிருக்கிறது ரஜினி. தமிழ்சினிமாவின் தற்போதைய சூழல், குடிநீரோடு கலந்த கூவம் போல நாறிக்கிடக்கிறது. ஒரு படமும் ஓடுவதில்லை. அப்படி ஓடினாலும் முறையான கணக்குகள் தரப்படுவதில்லை. ஆளாளுக்கு கொள்ளையில் ஈடுபட்டு, மொத்த நஷ்டத்தையும் தூக்கி தயாரிப்பாளர் தலையில் வைப்பதால், தினந்தோறும் ஒரு தயாரிப்பாளர் தொழிலை விட்டே துரத்தப்படும் நிலைமை.

இந்த கொடுமை போதாதென ஜி.எஸ்.டி என்று தாறுமாறான வரியை போட்டு மேலும் சினிமாவை கவலையில் ஆழ்த்தி வருகிறது மோடி அரசு. இந்த ஜி.எஸ்.டி முறைக்கு, முன் எப்போதும் இல்லாதளவுக்கு கடுமை காட்டியிருக்கிறார் கமல். விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல. கோடம்பாக்கத்தின் எல்லா சினிமா சங்கங்களும் இந்த ஜி.எஸ்.டியை குறைங்க என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சினிமாவால் மட்டுமே சம்பாதித்து சக்கரவர்த்தி வாழ்க்கை வாழும் ரஜினி, அட்லீஸ்ட் ஒரு அறிக்கை கூடவா வெளியிடக் கூடாது?

வெளிப்படையாக இந்த கேள்வியை பலரும் கேட்ட நிலையில், நாகரீகமாக கோரிக்கை வைத்தார் அம்மா கிரியேஷன்ஸ் சிவா. ரஜினி சார் குரல் கொடுத்தால்தான் மத்திய அரசு திரும்பி பார்க்கும். குரல் கொடுங்க சார் என்றார் சிவா. அவர் பேசி ஒரு வாரம் ஆச்சு. இன்னும் ரஜினியிடமிருந்து ஒரு அறிக்கையும் வரவில்லை. இத்தனைக்கும் அவர் சென்னையில்தான் இருக்கிறார்.

சிவாவுக்காக இல்லாவிட்டாலும், அன்றாடம் ஆயுள் தண்டனைக்கு ஆளாகிவரும் தமிழ்சினிமாவை காப்பாற்றவாவது குரல் கொடுங்க ரஜினி சார்…

5 Comments
 1. தமிழ்ச்செல்வன் says

  எதுக்குடா ரஜினி குரல் கொடுக்கணும். வார்த்தையை அளந்து பேசு. கள்ள மவுனம் காப்பது கள்ள பணத்தில் கொள்ளை அடிக்கும் திரை உலகம் தான்,. ரஜினி அல்ல. மேலும், அப்படியாவது சினிமா அழிந்தால் தமிழ் சமூகத்திற்கு நல்லது தானே !!!

 2. MGR says

  ஊழல் அற்ற லஞ்ச லாவண்யம் அற்ற வெளிப்படை நிர்வாகம் தான், மனிதபுனிதர் ரஜினியோட ஆட்சிக்கொள்கை .

 3. Kumar says

  ஏதாவது சொன்னா என்ன எதிர்வினை ஏற்படும்னு தெரியாத ஆளா ரஜினி? இவ்வளவு நாள் வாயை திறந்தானா? இப்ப தனக்கு வருமானம் போயிரும்னு துடிக்கிறான் பாரு! – இப்படி வசை பாடுவானுக! தேவையா அவருக்கு இதெல்லாம்?

 4. Satyanaarayana says

  சும்மா எதுக்கு வாய தொறந்து மத்திய அரசிடம் பகைச்சிக்கறதுக்கு ரஜினி என்ன தன்னலமில்லா தலைவனா? ரசினி ஒரு சுயநல ஓநாய்.

 5. கிரி says

  அந்தணன் உங்களுக்கே தெரியும்.. அவர் சொன்னாலும் நீங்களே அதை வைத்து ரஜினியின் இரட்டை வேடம் என்று கட்டுரை எழுதுவீங்க :-)

  அவர் பேசினாலும் சர்ச்சை பேசாவிட்டாலும் சர்ச்சை.. ரஜினியாக இருப்பது ரொம்ப சிரமம்.

Leave A Reply

Your email address will not be published.