சாந்தனுவே நடிக்கட்டும்! விட்டுக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்!

0

டைரக்டர் பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்து (பல்வேறு இன்னல்களை தாங்கி… இது நம்மளோட எக்ஸ்ட்ரா பிட்) தொழில் கற்றுக் கொண்ட அதிரூபன் இயக்குகிற படம் முப்பரிமாணம்! சாந்தனு ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். 67 நாட்களில் இப்படத்தை முடித்திருக்கிறார் என்பதுதான் அழுத்தமான குறிப்பு. ஏன் இப்படியொரு குறிப்பு? இவர் பாலாவின் உதவி இயக்குனராச்சே? பொதுவாகவே பாலாவுக்கு ஒரு படத்தை குறைந்தது ஒரு வருஷமோ இரண்டு வருஷமோ இயக்கிதான் பழக்கம். அதிரூபன் 67 நாட்களில் படத்தை முடித்துவிட்டார் என்பது அதிசயம்தானே?

இது முற்றிலும் பாலா ஸ்டைல் படமல்ல என்பது இன்னொரு முக்கியமான தகவல். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்க வருவதற்கு முன்பே இந்தக் கதையை அவரிடம் சொல்லிவிட்டாராம் அதிரூபன். கதையில் மயங்கிய ஜி.வி.பிரகாஷ், “நான்தான் இதுக்கு மியூசிக் போடுவேன். நீ எப்ப படம் இயக்க வந்தாலும் முதல்ல எங்கிட்டதான் கேட்கணும்” என்றெல்லாம் கூறியிருக்கிறார். சொன்ன மாதிரியே தயாரிப்பாளர் கிடைத்ததும் அதிரூபனால் டிக் அடிக்கப்பட்ட ஒரே மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ்தான்.

இவர் போயிருந்த நேரம், அவரும் ஹீரோவாகிவிட்டார். இருந்தாலும், அவரே மயங்கிய கதையில் அவரே நடிக்கணும் என்று அடம் பிடிக்காமல், “ஹீரோ சாந்தனு நல்ல சாய்ஸ்” என்று பாராட்டியும் இருக்கிறார். 67 நாட்களில் படத்தை முடித்துவிட்டாலும், பின்னணி இசைக்கே 85 நாட்கள் எடுத்துக் கொண்டாராம் ஜி.வி.பிரகாஷ்.

சரத்குமார், பிரபு, பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆன்ட்டனி உள்ளிட்ட சுமார் 27 நடிகர்களை நடிக்க வைத்து ஒரு பிரமோ சாங் அமைத்திருக்கிறார்கள். படத்திலும் அது வரும் என்றார் அதிரூபன்.

பின்னே… இவ்ளோ செலவு பண்ணி படத்துல வரலேன்னா நீங்க பாலாவோட கையை இன்னும் விடலேன்னு அர்த்தமாயிடுமே? கரெக்டு கரெக்டு…!

Leave A Reply

Your email address will not be published.