அஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து! கை விட்ட விஜய் ரசிகர்கள்! கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்!

0

‘இந்திரனே சந்திரனே’ என்று புகழப்படுவதை விட, ‘தீவட்டி தலையா, கோமுட்டி வாயா’ என்றெல்லாம் இகழப்பட்டால்தான் சீக்கிரம் போய் ‘ரீச் ’ ஆக முடியும் போலிருக்கிறது. இந்த நெகட்டிவ் ரூட் தரும் இன்பத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருகிறார் வெர்ஜின் பையன் ஜி.வி.பிரகாஷ். இன்னும் சொல்லப் போனால், நேற்றைய வேர்ல்டு ட்ரென்ட் நம்ம ஜி.வி.தான்! தெரு சண்டையை விட கேவலமாகிப் போன ட்விட்டர் சண்டையில், ஜி.வி.யின் சட்டையெல்லாம் கிழிந்து வாயெல்லாம் புண்ணாகிப் போனதுதான் கொடுமை.

ஜி.வி.பிரகாஷை யாரோ ஒரு அஜீத் ரசிகர் திட்டப் போக, அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தொழிலை கவனிக்க வேண்டிய ஜி.வி, திரும்பி அவரை திட்ட ஆரம்பித்தார். பேச்சு வளர்ந்து வளர்ந்து ஒரு கட்டத்தில் அஜீத்தை ஆமை என்று இவரே திட்ட… வெகுண்டெழுந்தது அஜீத்தின் ஆயுதப்படை! அப்புறமென்ன? பேக்கரிக்குள் புகுந்த எலி, சாக்கடைக்குள் விழுந்த மாதிரி ஆகிவிட்டது நிலைமை!

ஜி.வி.பிரகாஷின் ஏழு தலைமுறையையும் இழுத்து ‘பேட் வேர்ட்ஸ்’ அர்ச்சனை செய்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்கள். ஓரமாய் வேடிக்கை பார்ப்போம் என்றில்லாமல் தனுஷ் ரசிகர்களும், ‘இதுதான்டா சந்தர்ப்பம்’ என்று உள்ளே நுழைந்து சவட்டி களித்துவிட்டார்கள். ஒரு ஆங்கில நாளிதழ் சிறந்த நடிகர் விருதை தனுஷுக்கு கொடுத்தபோது அதை விமர்சித்திருந்தார் ஜி.வி. அதனால்தான் உள்ளே நுழைந்தது தனுஷின் சைத்தான் படை.

இப்படி நாலாபுறமும் நசுங்கிய ஜி.வியை ஒரு விஜய் ரசிகர் கூட கைகொடுத்து தூக்கிவிடவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. இத்தனைக்கும் ஜி.வி.பிரகாஷ் போராடி வருவதே விஜய்யின் புகழை பரப்புவதற்குதான். இல்லையென்றால் இவர் ஏன் அஜீத்தை திட்டப் போகிறார்?

கலிங்கத்து பரணி போல கட்டி உருண்டு கொண்டிருக்கும் இந்த கலகத்துப் பரணியை முடித்து வைக்க எந்த புண்ணியவானாவது எமர்ஜென்சி வேகத்தில் வாங்கப்பா… குழந்தை ரொம்ப நேரம் தாங்காது!

Leave A Reply

Your email address will not be published.