விஜய் தனுஷ் விவகாரம்! காறித் துப்பிய ஜி.வி.பிரகாஷ்

0

ஹீரோவாக அவதாரம் எடுத்த பின்பு ஜி.வி.பிரகாஷுக்குள் இருக்கிற பைட் மாஸ்டர் அவ்வப்போது தலையெடுத்து, “அடிக்கட்டுமா? உதைக்கட்டுமா?” என்று கேட்பார் போலிருக்கிறது. இருந்தாலும் இந்த முறை அவர் கோபப்பட்டத்தில் நியாயம் இல்லாமலில்லை. ஒரு பிரபல ஆங்கில நாளேடு ‘இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் யார்?’ என்ற கேள்வியுடன் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பெரும்பாலான வோட்டுகள் விஜய் என்றே வர, அவரை சந்தித்து இது தொடர்பாக ஒரு பேட்டியையும் எடுத்துவிடலாம் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

ஆனால் விஜய் சிக்கினால்தானே? அவரை வளைக்க எப்படி திட்டமிடலாம் என்று யோசித்தவர்களுக்கு பளிச்சென சிக்கியவர் ஜி.வி.பிரகாஷ்தான். தெறி படத்திற்கும் அவர்தானே மியூசிக். அந்த நம்பிக்கையில் அவரது உதவியை கேட்டு அந்த நிறுவனத்தின் நிருபர் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் அனுப்ப, நொந்நே போனார் ஜி.வி. “என் வேலை அதுவல்ல. நீங்க இது சம்பந்தமா விஜய் மேனேஜர்ட்டதான் பேசணும். நான் என் தொழில் விஷயத்தை தவிர வேறு விஷயங்களுக்காக விஜய்யிடம் பேசுவது நாகரீமல்ல” என்று திருப்பி ஒரு பதிலை அனுப்பிவிட்டார் ஜி.வி.

இது நடந்த சில தினங்களில் அவருக்கு பேரதிர்ச்சி. விஜய்யை சந்தித்து இந்த கருத்துக்கணிப்பு முடிவு பற்றி கருத்து அறிய முடியாத நாளிதழ், விஜய்யையே மாற்றிவிட்டு அந்த இடத்திற்கு தனுஷை கொண்டு வந்துவிட்டது. அதாவது இந்த வருடத்தின் விரும்பத்தக்க நடிகர் தனுஷ் என்று சொல்லி கதையை முடித்துக் கொண்டது. இந்த அறிவிப்பை பார்த்த ஜி.வி பொங்கிவிட்டார் பொங்கி.

தனக்கும் அந்த நிருபருக்கும் நடந்த உரையாடலை அப்படியே வெளியிட்டதுடன் “இந்த பொழப்புக்கு பேருதான் எச்ச” என்றும் காட்டமாக விமர்சித்துவிட்டார். ஜி.வி.க்கு தனுஷ் மீது கோபமா, அல்லது நாளிதழ் மீது கோபமா?

இருந்தாலும் நீ பொங்கு சித்தப்பு!

Leave A Reply

Your email address will not be published.