ஆளே மாறிட்டார் ஜி.வி. இப்பல்லாம் அடிக்கடி…?

0

‘மவனே…’ என்று பல்லை கடித்துக் கொண்டு டயலாக் பேசினாலும், ஆன்மீகம் என்று வந்துவிட்டால், ‘சிவனே…’ என்று சிலிர்த்துக் கொள்வது சிம்புவின் பக்தி. அவ்வப்போது இமயமலைக்கு போய், சிவனை வணங்குவதும், ‘சிவா சிவா’ என்று சிவ நாமம் உச்சரிப்பதும்தான் இப்போது சிம்புவுக்கு பெரும் பணியாக இருக்கிறது.

கிட்டதட்ட அப்படியொரு நிலைக்கு ஆளாகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். பெரும் சிவ பக்தர் ஆகிவிட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் திருவண்ணாமலைக்கு சென்று சிவனை வணங்குவதே பெரும் பாக்யமாகித் திரிகிறார் அவர்.

கடவுளை வணங்கினால் கைமேல் பலன் என்பது ஜி.வி.விஷயத்தில் உண்மையாகியிருப்பதுதான் ஆச்சர்யம். கைவசம் பத்து படங்கள் இருக்கிறது. (நடிப்புக்காகதான், இசைக்காக அல்ல) இதில் பாலா படமும், வெற்றிமாறன் படமும் அவரை வேறொரு லெவலுக்கு கொண்டு போகும் என்பதில் சந்தேகமேயில்லை.

‘எல்லாம் சிவன் அருள்’ என்று நம்புகிறார் ஜி.வி. அனுபவிச்சவரே நம்பும்போது, நாத்திக நாட்டாமைக்கெல்லாம் இதில் இடமேது?

Leave A Reply

Your email address will not be published.