தனுஷ் ஏரியாவில் ஜி.வி.பிரகாஷூக்கு நோ என்ட்ரி?

0

கம்போசிங் தியேட்டரிலிருக்கும் மியூசிக் கீ போர்ட் சைசுக்கு தன் வாயையும் திறந்து வைத்திருக்கிறார் ஜி.விபிரகாஷ். அதன் விளைவுகள் அவ்வப்போது பல்லை காட்டிக் கொண்டிருக்கிறது அவர் வாழ்வில். முதல் பயங்கரம் இதுதான். வடசென்னை படத்தில் ஜி.வி.பிரகாஷ் இல்லை.

பொதுவாகவே வெற்றி மாறன் இயக்குகிற படங்களில் எல்லாம் ஜி.வி.பிரகாஷ் பெயர் அழையா விருந்தாளியாக உள்ளே வந்துவிடும். பொல்லாதவன் துவங்கி, நேற்று வந்த விசாரணை வரை, வெற்றிமாறனால் விட்டுக் கொடுக்கவே முடியாத பெயர் ஒன்று உண்டென்றால் அது ஜி.வி.பிரகாஷ்தான். அந்தளவுக்கு இசையால் இணைந்து, பசையாய் ஒட்டிக் கொண்டிருக்கும் இருவரையும் கொஞ்சம் தள்ளி நில்லுங்கப்பா என்று தடை போட்டுவிட்டது வடசென்னை. அதெப்படி?

எல்லாம் ஜி.வி.யின் அகல வாயால் வந்த வினை. டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ், விஜய்க்கு விருது தராமல் தனுஷுக்கு தந்தது அல்லவா? அதை கடுமையாக விமர்சித்திருந்தார் ஜி.வி. அப்போதே தன் காம்பவுண்டுக்குள் ஜி.வி.க்கு இடம் கிடையாது என்று முடிவெடுத்துவிட்டாராம் தனுஷ். வடசென்னை படத்திற்காக டெக்னீஷியன்கள் லிஸ்ட்டை டிக் அடிக்கும் போது ஜி.வியின் பெயரும் அதில் இருக்க, சற்றே நெற்றியை சுரண்டிக் கொண்டாராம் தனுஷ்.

“நீங்க ஜி.வியை விட்டு வர மாட்டீங்க. எனக்கு அனிருத்துன்னா இஷ்டம். அதனால் உங்களுக்கும் வேணாம். எனக்கும் வேணாம். சந்தோஷ் நாராயணன் ஓ.கே” என்றாராம் தனுஷ். அப்புறமென்ன?

தனுஷ் காம்பவுண்டில் இனி ஜி.விக்கு வேலையில்லை!

Leave A Reply

Your email address will not be published.