தேவ் படத்தை ஓட வைக்க எச்.ராஜா முயற்சி?

0

‘கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடும்யா…’ என்கிற அறிய பெரிய தத்துவத்தை தமிழகத்திற்கு வழங்கிய கருணாஸ் அண் கோவே கதி கலங்கி போகும் இந்த செய்தியை கேட்டால். கார்த்தி, ரகுல் ப்ரித்சிங் நடித்திருக்கும் ‘தேவ்’ படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ்.

இந்தப்படத்தின் பிரமோஷனுக்காக வைக்கப்பட்ட பிரஸ்மீட்டில், ஆர்.ஜே. விக்னேஷ் ஒரு விஷயத்தை உளறப்போக… வந்ததே வினை! ‘ஏம்ப்பா… நீ வேற. சும்மாயிரு’ என்று கண்ணை காட்டினார் கார்த்தி. தேங்கா உடைக்குறேன்னு புள்ளையாரை உடைச்சுடக் கூடாதே என்கிற ஜாக்கிரதை உணர்வுதான் மேலோங்கி இருந்தது அதில்.

அட்வென்சர் மட்டுமே பிடிக்கும் ஒரு வாலிபன், உலகம் முழுக்க சுற்றி சுற்றி வந்து செய்யும் சாகசங்கள்தான் இந்த படத்தின் மெயின் லைன். பணத்தை தண்ணீராக அள்ளி இரைத்திருப்பார்கள் போலிருக்கிறது. உலகத்தின் அழகையெல்லாம் திரைக்கு கொண்டு வந்திருந்தார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். இன்னும் கொஞ்ச நேரம் காட்ட மாட்டார்களா என்று நினைக்க வைத்தது ட்ரெய்லரும் பாடல்களும். இந்த நிகழ்வில்தான் தொகுப்பாளர் ஆர்.ஜே. விக்னேஷ் எச். ராஜா மேட்டரை ஓப்பன் செய்தார்.

படத்திற்கு சென்சார்ல ரெண்டே ரெண்டு கட்தான் கொடுத்தாங்க. ஒரு இடத்தில் எச்.ராஜாங்கற பெயரையும் இன்னொரு இடத்தில் மோடிங்கிற பெயரையும் என்று அவர் சொல்லி முடிக்க… தன் உருட்டு விழிகளால் அவரை துளைத்தெடுத்தார் கார்த்தி.

ஒருவேளை அந்த இடத்தில் கட் பண்ணாமலிருந்தால், படத்தை மெர்சலாக்கி ஓட வைத்திருப்பார்கள் பி.ஜே.பி யினர். கெடுத்துட்டீங்களே ஆபிசர்ஸ்!

பின் குறிப்பு- இந்த மாதிரி லோ கிளாஸ் எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் தேவைப்படாமலே தேவ் ஓடும் என்று நம்புவோமாக!

Leave A Reply

Your email address will not be published.