சதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்!

0

பாசத்தை கொட்டி படம் வாங்கும் விநியோகஸ்தர்களில் பலர், வாங்கிய ஈரம் காய்வதற்குள்ளேயே மோசக் கயிறுடன் திரும்பி வருவதை அண்மைக்காலமாக அதிர்ச்சியோடு பார்த்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். லிங்கா நஷ்டம் என்பதில் ஆரம்பித்தது அவர்களின் அட்டகாசம். அதற்கப்புறம் வாங்குகிற அத்தனை படத்தையும் நஷ்டம் நஷ்டம் என்று கூறியே கழுத்தில் துண்டு போடும் அவர்கள், துண்டையும் கிழித்து, துட்டையும் பிடுங்கிப் போகிற அவலம் இன்னும் இன்னும் தொடர்கிறது. இத்தனைக்கும் எம்.ஜி.முறையில் படம் வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு ‘நோ ரிட்டர்ன்’ என்கிற விதி இருந்தும், பல நேரங்களில் அதை மறந்துவிட்டு மண்டை காய விடும் விநியோகஸ்தர்களால், தொடர் மண்டையிடியில் இருக்கிறது சினிமா.

தற்போது அஜீத் நடித்து வரும் AK57 படத்திற்கும் அப்படியொரு கிடுக்கிப்பிடியை நட்டு போல்ட்டு போட்டு பிக்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறதாம் விநியோகஸ்தர் வட்டாரம். ஏன்? எப்படி? எதற்காக?

AK57 படத்தை தயாரித்து வரும் சத்யஜோதி நிறுவனம், தொடரி படத்தை தயாரித்ததல்லவா? அதை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலருக்கு கடும் நஷ்டமாம். அதை வசூல் பண்ண வேண்டும் என்றால், அஜீத் படத்தில் கையை வைத்தால்தான் முடியும் என்று நினைக்கிறார்களாம் அவர்கள். AK57 வெளிவருவற்கு முதல் இரண்டு நாட்களுக்கு முன் கட்டையை குறுக்கே போட்டால் கொடுத்துதானே ஆகணும்? இதுதான் அவர்களின் திட்டம்.

கூடி கூடி சதிவலை பின்னும் இவர்களின் திட்டம் அஜீத்தின் காதுகளுக்கும் போயிருப்பதால், அவரே சில அதிரடி முடிவுகளை எடுப்பார் என்கிறது ரகசிய தகவல் வட்டாரம். என்ன முடிவா இருக்கும்? ஒருவேளை சசிகலாவை மீட் பண்ணுவாரோ?

Leave A Reply

Your email address will not be published.