தமிழ் ராக்கர்ஸ்… ப்ளீஸ்! டைரக்டர் ஹரியின் வித்தியாசமான அப்ரோச்!

1

பல வருஷங்களாகவே தமிழ்சினிமா தயாரிப்பாளர்களின் பாக்கெட்டை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது தமிழ்ராக்கர்ஸ் இணையதளம். திருட்டு விசிடிக்கு எதிராக குட்டிக்கரணம் அடித்து வரும் பலரும், இந்த இணையதளத்தின் குறுக்கு வழி குஸ்தியை சகிக்க முடியாமல் பிளாஸ்திரியோடு திரிகிறார்கள். அண்மையில் மனம் புழுங்கிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கடும் ஆத்திரத்தில் சில வார்த்தைகளை உதித்ததை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது.

இதற்கு சுட சுட பதிலளித்த தமிழ்ராக்கர்ஸ் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல், சிங்கம் 3 வெளியாகும் நாள் எங்கள் நாள் என்று திருப்பி ட்விட் செய்திருந்ததும் ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். இத்தனைக்கும் சுமார் 100 கோடி கடனில் இருக்கிறாராம் ஞானவேல்ராஜா. இது ஒரு புறமிருக்க சற்று சாத்வீகமான முறையில் மேற்படி இணையதளத்திற்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார் சி3 படத்தின் இயக்குனர் ஹரி.

உங்களுக்கு யார் மீது கோபம்? எதனால் இப்படி செய்கிறீர்கள்? இப்படி செய்வதால் உங்களுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ஒன்றும் இல்லை. எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு பத்து நிமிஷம் உட்கார்ந்து யோசியுங்கள். நாம் செய்வது சரியா, தவறா என்று. ஒரு தயாரிப்பாளர் மூலமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைகிறார்கள். அந்த தயாரிப்பாளரை நசுக்கிவிட்டால் அடுத்து அவர் படமே தயாரிக்க மாட்டார். ஒரு தொழில் துறையை நசுக்கிவிட்டு நீங்கள் எதை சாதிக்கப் போகிறீர்கள்? பாதிக்கப்படுவது உங்கள் அக்காவோ அண்ணனாகவோ இருந்தால் உங்களால் இப்படி செய்ய முடியுமா? கொஞ்சம் யோசிங்க…ப்ளீஸ் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஹரியின் இந்த அணுகுமுறை தமிழ்ராக்கர்ஸ் உரிமையாளருக்கு மன மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதுதான் மிலியன் டாலர் கொஸ்டீன்.

இதற்கிடையில் சி 3 படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. அதற்கப்புறம் விதி விட்ட வழி?

1 Comment
  1. Ragu says

    சிங்கம் 3 விமர்சனம் : திரை கதையின் வேகத்தை கூட்டாமல் காமெராவின் வேகத்தை டாப் ஆங்கில் கிளோஸ் ஆப்பில் கூட்டி காமெராவை ஆட்டு ஆட்டுனு ஆட்டி நம்மை படுத்தும் படம் தான் இது. டைரக்டர் ஹரி சார் அப்படியே ஊரு பக்கம் பொய் செட்டில் ஆய்ருங்க. சிங்கம் 4 நாங்க தாங்க மாட்டோம். பாடல்கள் தண்டம். வரலாம் வா பைரவா song வாடா வாடா னு அப்படியே ஒலிக்கிறது. யாராவது ஹாரிஸ் நாராயணனை நாடு கடத்தினால் நம் காது தப்பும். ஆஸ்திரேலியாவிலிருந்து மருத்துவ மருந்து கழிவுகளை India கொண்டு வந்து எரித்து சுற்றுப்புற சூழலை மாசுபடுத்தி சம்பாரிக்கும் வில்லனை கிளைமாக்ஸில் சூர்யா சுட்டு கொல்லும் கதையை கெடுத்து வைத்துள்ளார்கள். சுருதி ஹாசன் ஒரு சின்ன ஆறுதல். ரோபோ ஷங்கர் மற்றும் சூரி காமெடி எடுபடவில்லை. இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் போட்டால் கூட பாக்காதீர்கள். தலை வலி நிச்சியம்.

Leave A Reply

Your email address will not be published.