ஏ.ஆர்.ரஹ்மானிடம் மீசை முறுக்கிய ஹிப் ஹாப் ஆதி?

0

சி.எம் சீட்டில் எடப்பாடி உட்கார்ந்ததை விடவும், வெற்றித் தாயின் மடியில் சுலபமாக உட்கார்ந்துவிட்டார் ஹிப் ஹாப் ஆதி. 2014 ல் சென்னைக்கு வந்து, 2017ல் ஒரு படத்தை இயக்கி ஹீரோவாகவும் வெற்றிக் கொடி நாட்டுவது என்பது அவ்வளவு ஈசி இல்லை. உழைப்பு பாதியும், அதிர்ஷ்டம் மீதியுமாக டார்க்கெட் ‘வின்’ பண்ணிய ஆதிக்கு, ஒருவகையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் தூரத்து கடவுளாக இருந்திருப்பார். அதிலென்ன டவுட்?

சிவாஜி, ரஜினி பாதிப்பில்லாமல் யாரும் நடிக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ? அதைவிட பெரிய உண்மை, இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் பாதிப்பில்லாமல் இசையமைக்க முடியாது என்பதும்! அப்படியொரு இசை ஆசானை, தனக்கு தெரியாமலே டார்ச்சர் பண்ணியிருக்கிறார் ஆதி. அதெப்படி?

சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்த ‘மீசையை முறுக்கு’ திரைப்படம், ஆதியின் கை வண்ணத்தில் உருவான படம். அவரே இசையைமத்து, இயக்கி, ஹீரோவாகவும் நடித்த அந்தப்படம், இந்த வருடத்தின் கலெக்ஷன் தூக்கல் ரகம். விரைவில் இதே மாதிரி சிக்கன சிகாமணியாக இன்னொரு படத்தை இயக்கவும் பைல் நகர்த்த ஆரம்பித்துவிட்டார் ஆதி. சரி… ரஹ்மானுக்கு குடைச்சல் தந்த விஷயத்திற்கு வருவோம்.

‘மீசையை முறுக்கு’ படத்தின் கதையும், காட்சியமைப்புகளும் ஏ.ஆர்.ரஹ்மான் தானே தயாரித்து இயக்கி வருகிறார் அல்லவா, அந்தப்படத்தின் முக்கால்வாசி சாயலில் அமைந்துவிட்டதாம். விஷயத்தை கேள்விப்பட்டு மீசையை முறுக்கு படத்தை ஸ்பெஷலாக வாட்ச் பண்ணிய இசைப்புயல் படு பயங்கர அப்செட் என்கிறார்கள். இதற்கப்புறமும் அந்தப் படத்தை வெளியிட்டால், அது ஏதோ மீசையை முறுக்கு படத்தை பார்த்து நான் காப்பியடித்தது போல இருக்குமே என்றும் கவலை கொள்கிறாராம்.

முந்திக்கிட்டவங்களுக்கு எல்.பி.கேஸ். முடியாதவங்களுக்கு முட்டைக் கோஸ்னு ஆகிருச்சே நிலைமை?

Leave A Reply

Your email address will not be published.