ஹிப் ஹாப் ஆதியின் தப்பு தண்டா ஆட்டம்! ஐயோ பாவமான அறிமுக இயக்குனர்

0

Hip Hop Adhi, SundarC, Vishal, hockey player, Meesaya Murukku, Hip Hop Tamizha,

‘மீசையை முறுக்கு’ படத்திற்கு பின் ஹிப் ஹாப் ஆதிக்கும் ஒரு பட்டுக்கம்பளம் விரித்துவிட்டது இன்டஸ்ட்ரி. கடந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படங்களில் மீ மு வும் ஒன்று என்பதால்தான் இந்த கவுரவம். மீண்டும் சுந்தர்சியே தயாரிக்க, பார்த்திபன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி வருகிறார். இதில் ஹாக்கி பிளேயராக நடித்து வருகிறார் ஆதி.

முன் குறிப்பெல்லாம் ஓ.கே. இப்படத்தின் பின்குறிப்பை கேட்டால்தான் ‘பிசாசு வாயில பிஸ்கோத்து சிக்கிருச்சே?’ என்பது போல கவலையாக இருக்கிறது. நாம் சொல்கிற அந்த பிஸ்கோத்தே பார்த்திபன்தான்.

சுந்தர்சியிடம் முழு ஸ்கிரிப்டையும் ஒப்படைத்து அவர் திருப்திக்குப்பின்தான் இப்படத்தில் ஒப்பந்தமே செய்யப்பட்டாராம் இந்த அறிமுக இயக்குனர். ஆனால் ஷுட்டிங் ஸ்பாட்டில் மெல்ல ஒவ்வொரு வசனங்களாக மாற்றிய ஆதி, ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு ஸ்டூலை வரவழைத்து, தம்பி இதுல சமத்தா உட்கார்ந்துக்கணும். புரிஞ்சுதா? என்று கூறிவிட்டு டைரக்டர் நாற்காலியை கைப்பற்றிவிட்டார்.

எடிட்டிங், கட்டிங் என்று எல்லாவற்றிலும் ஆதி கையே ஒங்க, அப்பாவி பார்த்திபன் சுந்தர்சியிடம் முறையிட்டாராம்.

“அவன் முதல் படத்திலிருந்தே அப்படிதான். எனக்கும் விஷாலுக்குமே தண்ணி காட்டிட்டான். என்ன பண்றது? கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” என்றாராம் அவர்.

கடைசியில் ஹாக்கி பேட் ஆதியாக, அடிபடும் பந்தாகிவிட்டார் பார்த்திபன். ஆஹா… இதுவல்லவோ அதிகார விளையாட்டு!

Leave A Reply

Your email address will not be published.