இதுதான் செகன்ட் லுக்கா? கதற விட்டுட்டீங்களே காலா?

1

நள்ளிரவு பேஜாரு நமக்கொண்ணும் புதுசு இல்ல. ரஜினி, அஜீத், விஜய் படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டரோ, டீஸரோ ஊரடங்கி குறட்டை விடும் நேரத்தில்தான் வெளியிடப்படுகின்றன. இளம் ரத்த ரசிகர்கள் கண் கொட்ட விழித்திருந்து கண்டு களிக்கிறார்கள். இவங்களுக்குதான் தெரியுமா… நாங்களும் பண்ணுவோம்ல? என்று ஜெய், வெங்கட் பிரபு, பிரேம்ஜி வரைக்கும் இந்த நள்ளிரவு பஜனைக்கு பலியானது தனி சோகம். அதை விடுங்கள்…

காலா செகன்ட் லுக் எப்படி? ரஜினியின் வெறி பிடித்த ரசிகர்களுக்கு எப்படியோ… இததான் ஏற்கனவே பார்த்தாச்சேப்பா என்பது போலவே இருந்தது மற்றவர்களுக்கு. காலா ஷுட்டிங் துவங்கிய முதல் நாளே அன் அபிஷியலாக பல படங்கள் சோஷியல் மீடியாவில் உலவ ஆரம்பித்துவிட்டன. ஐயய்யோ…பெப் போச்சே என்று பதறிய தனுஷ், பா.ரஞ்சித்தை அழைத்து, இப்படி கண்டமேனிக்கு படங்கள் வர்றதை தடுங்க பாஸ்… என்று கூறியிருந்தார். அதற்கப்புறமாக அவர் கண்ட்ரோல் செய்தார். அதற்குள் வந்துவிழுந்த ஸ்டில்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

வேறு வழியில்லாமல் காலாவின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதான் பார்த்தாச்சே… எபெக்டடோடு எதிர் கொண்டார்கள் ரசிகர்கள். கிட்டதட்ட அதே நிலைமைதான் இப்போதும். இந்த ஸ்டில்லுக்கும், இதற்கு முன் வந்த ஸ்டில்களுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் கூட இல்லை.

இதற்காகதான் கண்ணுமுழிச்சு காத்திருந்தீங்களா ஓல்டு பாய்ஸ்?

1 Comment
  1. haran says

    NEW TAMIL CINEMA .COM PESAMA VIJAY CINEMAS NU NAME CHANGE PANUGA ATHPADI VIJAY TAVIRA ELLAR NADIGAR PATHIYUM NEGATIVE NEWS MATTUMTHAN PODUVOMNUGRATHU UNGA KOLGAYA ORU VELA INTHA WEBSITE SAS nadathraronu enaku oru doubt

Leave A Reply

Your email address will not be published.