ஊர் வாயை உசுப்பிவிட்ட பாலா! நச்சுன்னா இருக்கு நாச்சியார் டீஸர்?

3

எவ்வளவுதான் உருவிவிட்டு அடித்தாலும் பாலா அடியை பல்லிளித்துக் கொண்டே பெற்றுக் கொள்கிற ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கதான் செய்கிறார்கள். (லட்சம் ஆயிரமா குறைஞ்சுருச்சே என்கிற வருத்தம் இல்லாமலில்லை) பாலா பழசாயிட்டாரு. அவரை விட பழசாயிருச்சு அவரது படங்கள் என்ற உண்மையை அவரது முந்தைய படக் கலெக்ஷன்கள் கூறிவிட்டன.

நானும் சரி… என் படங்களும் சரி. டைட்டில்தான் வேற வேற. ஆளும் படைப்பும் அதேதான் என்கிற மாதிரி வந்திருக்கிறது பாலாவின் நாச்சியார் டீஸர். இதற்கு முன் இவரது படங்களில் வந்த சூர்யா, விக்ரம், விஷால், மாதிரிதான் இருக்கிறார் ஜி.வி.பிரகாஷும். அதே போலொரு சைக்கோ லுக் வேறு.

ஒரு வித்தியாசமும் இல்லையேப்பா… என்று ஒரு முடிவுக்கு வருகிற நேரத்தில், அதை இன்னும் உர்ஜிதப்படுத்துகிற மாதிரி, அருமை ஜோதிகாவின் வாயிலிருந்து தேவிடியா பயலுகளா என்கிற வார்த்தை வேறு. (இதை தேவையில்லாத பயலுகளா என்று சென்சாரில் மாற்றிக் கொள்வார்கள் என்பது வேறு விஷயம்)

நேற்றிலிருந்தே, சிவக்குமார் பேமிலிக்கு இது தேவையா என்கிற ரீதியில் விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்க, அகம் பிரம்மாஸ்மியாகிக் கிடக்கிறார்கள் பாலாவின் ரசிகர்கள்.

சொறியறதுக்கு பயன்படுகிற கொம்புக்கு என்னைக்காவது அரிச்சிருக்கா? விடுங்கய்யா விடுங்க!

3 Comments
  1. Velu says

    Disgusting to see daughter in law of dignified actor Sivakumar saying these bad words. Shame on Surya to release this trailer. Where all mather sangams disaapered? why you girls target only target poor simbu?

  2. Kartick samy says

    oh my god. Jo uttered thevadiya payale. very cheap tactic to promote the movie which is called as thevadiya polappu.

  3. raj says

    Criminalsy veru eppadi alappathu? Manbumigu kolaikarare! Manamugu repkarare endra??

Leave A Reply

Your email address will not be published.