எப்படி ஹீரோவானார் துருவ்? இதெல்லாம் ஒரு காரணமாம்!

2

தான் எடுக்கிற சினிமாவில் வைக்கிறார்களோ, இல்லையோ? ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளை தேவையில்லாத விஷயங்களில் வைப்பதில் தமிழ்சினிமாக் காரர்களுக்கு இணை அவர்களேதான்! மிஸ்டர் ஸ்மார்ட் என்று எடுத்த எடுப்பிலேயே வர்ணிக்க தூண்டுகிற விதத்தில்தான் இருக்கிறார் விக்ரம் மகன் துருவ். இவர் விக்ரமின் மகன் என்று ஒரு அடையாளம் போதும்… சினிமாக்காரர்கள் பல்லக்கு தூக்குவார்கள். அப்படியிருக்க… எதற்கு சுற்றி வளைத்து காரணத்தை தேடுகிறார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.

‘வர்மா’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் துருவ். அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தவரை அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடிக்க வைக்கிறார்கள். இயக்கம் பாலா. வர்மா படத்தின் தயாரிப்பாளருக்கு ஒரு டப்மேஷ் வந்ததாம். அதில் ரஜினி உள்ளிட்ட சில நடிகர்கள் போல பேசியிருந்தார் துருவ். மற்றவர்களோடு ஒப்பிட்டால் இந்த டப்மேஷுக்கு பத்துக்கு மூன்று மார்க் கூட கொடுக்க முடியாதுதான். இருந்தாலும் மன்னர் வீட்டு மான் கொம்பாச்சே? ஆஹா… ஓஹோ… நடிப்புன்னா இதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் தயாரிப்பாளர் மிஸ்டர் சர்மா. விக்ரமை அணுகி அவர் சம்மத்துடன் ஹீரோவாக்கிவிட்டார்கள்.

வராத நடிப்பையும் வழித்து சுரண்டிவிடுகிற ஆளேச்சே பாலா? ட்ரெய்லரே துருவ்வின் திறமையை சொன்னது.

மகனை ஸ்டேஜில் ஏற்றுகிற எல்லா அப்பாக்களுக்கும் வருகிற பதற்றம் விக்ரம் முகத்திலும் தெரிந்தது. “துருவ்வை ஹீரோவாக்கணும்னு முடிவு பண்ணியவுடன் என் சாய்ஸ் பாலாவாகதான் இருந்தது. துருவ் ஒரு மோதிரக் கையால் குட்டுப்படனும்னு விரும்பினேன். அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்யணும். ஆனால் பாலா ரீமேக் படம் எடுக்க மாட்டார். ஆனால் எனக்காக இந்த படத்தை ரீமேக் செய்ய ஒப்புக் கொண்டார். அவருக்கு நன்றி” என்று நெகிழ்ந்தார்.

“துருவ்வை ஆறு மாத குழந்தையிலேர்ந்து பார்க்குறேன். அப்பவே சிங்கம், புலி பொம்மையில ஆண் புலி எது, பெண் புலி எதுன்னு கரெக்டா எடுத்து வைப்பான்” என்று துருவ்வின் குழந்தை பருவத்தை நினைவுக்கு கொண்டு வந்த டைரக்டர் பாலா, “அவனுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கறதுல எந்த கஷ்டமும் இல்ல” என்றார்.

2 Comments
  1. Ram says

    why rush? Vikram is killing his own career and his son yet to mature. so, in ball, two wickets will be down. poor decision. Athuvum direction Bala, velangirum.

  2. singaram says

    துருவ்வை ஆறு மாத குழந்தையிலேர்ந்து பார்க்குறேன். அப்பவே சிங்கம், புலி பொம்மையில ஆண் புலி எது, பெண் புலி எதுன்னு கரெக்டா எடுத்து வைப்பான்” என்று…. wow wow wow… 6 months baby 😀 ithula comedy keemedy ethuvum ullathaaa omg

Leave A Reply

Your email address will not be published.