கறையை போக்க என்ன பண்ணலாம்? கடும் யோசனையில் பேமிலி!

1

‘இனி ஆயிரம் வார்த்தைகளால் விளக்கம் சொன்னாலும் அந்த ஒற்றை நிமிஷ கோபத்தால் வந்த விளைவை மாற்ற முடியுமா? சிவகுமார் சார்… உங்களைதான் கேட்கிறோம்’ என்று நாகரீகமாக சிலரும், ஆயிரம் டேஷ்களால் அர்ச்சிக்கிற அளவுக்கு கெட்ட வார்த்தைகளை கொட்டுகிற இன்னும் பலருமாக கிழிந்து கொண்டிருக்கிறது சோஷியல் மீடியா.

எல்லாம் நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க வந்த இளைஞர் ஒருவரின் செல்போனை பறித்து உடைக்கிற வீடியோ குறித்த விமர்சனங்கள்தான். படு அப்செட் ஆகிவிட்டது சூர்யா அண்ட் கார்த்தி பேமிலி. ஒருபக்கம் ரசிகர்களால் வாழ்ந்து வரும் இவர்கள், தன் அப்பாவின் செயலை வருத்தத்தோடுதான் எதிர்கொண்டார்களாம்.

ஏகப்பட்ட தயக்கத்திற்குப் பின் இந்த செயலுக்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார் சிவகுமார். அதற்கும் விமர்சன கணைகள் பாய்ந்துவிட்டன. அவரது இத்தனை வருஷ பெருமைக்கெல்லாம் இடுக்கண் வருகிற அளவுக்கு அசிங்க அபிஷேகங்கள்.

என்ன செய்யலாம் என்று மண்டையை பிய்த்துக் கொண்டு பிள்ளைகள், அதே இளைஞரை வரவழைத்து அதே சிவகுமார் கையால் புது போன் வழங்குகிற முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

அப்பாஸ்சே வீடு தேடி வந்து ஹார்பிக் போட்டு கழுவுனாலும், அழியாத இமேஜ் இது. நடக்குமா புள்ளைகளே?

கடைசி தகவல்- சம்பந்தப்பட்ட அந்த இளைஞருக்கு 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்தனுப்பிவிட்டார் சிவகுமார். சச்சரவுக்கு முற்றுப்புள்ளி வைங்கப்பா…

1 Comment
  1. Raman says

    கல்வி உதவின்னு இவங்க அகரம் மூலம் கொடுக்கும் 5 இல்ல 10 ஆயிரம் பாவம் பஸ்ஸுக்கே பத்தாது. அகரம் கூட tax குறைவா கட்ட ஒரு கருவி தான். இன்னமும் சிவா குமார் பேமிலி பேருக்கு ஏழை மாணவர்களுக்கு உதவுவதாக விளம்பரம் தேடாமல் உண்மையாகவே ஒரு நல்ல தொகையை படிப்பு கொடுக்கலாம். திருடனுங்க ஒன்னும் புடுங்க மாட்டான் மார்க்கண்டேயன். Cell போன் உடைக்கற அளவுக்கு அவளோ கோவம், எரிச்சல், பண திமிரு, புகழ் போதை

Leave A Reply

Your email address will not be published.