வெளியூர் ஹீரோ சர்டிபிகேட்! வேலைக்கு ஆகுமா சதீஷ்?

0

வறண்ட பாலை வனத்தில் செருப்பில்லாமல் தவழ்கிற சிற்றெறும்பு போலாகிவிட்டான் தமிழ்சினிமா ரசிகன். ஏன்யா ஏன்? சிரிக்கிற மாதிரி காமெடி பண்ற அம்புட்டு பேரும் ஹீரோவாகிட்டா லப்பை சப்பையெல்லாம் ‘நான்தான் வடிவேலு’ என்று இறங்குவது சகஜம்தானே? அப்படி எள் இல்லாத ஊருக்கு இலுப்பை பூ ஃபர்ஸ்டும்மா என்றாகிவிட்டார் சதீஷ்.

ஒரு ஹோம் வொர்க்கும் இல்லை.  ஸ்கிரிப்ட் எழுதித்தர தனி ஆட்களும் இல்லை. வேறென்ன செய்வார் சதீஷ். படம் பார்க்க வருகிற ரசிகனின் பல்லை பிடித்து இழுத்து பளிச் பளிச்சென சிரிங்கடா என்று இம்சித்து வருகிறார். நல்லவேளையாக ஸோலோ படத்தில் அப்படியொரு இம்சை இருக்காது என்று நம்புவோமாக!

துல்கர் சல்மான், தன்ஷிகா, நேஹா ஷர்மா, ஸ்ருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் தயாராகியிருக்கும் இந்த படத்தை பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். இப்படத்தின் பிரமோஷனுக்காக சென்னை வந்த துல்கர், சதீஷ் குறித்து மனம் திறந்து பேசியதை கேட்டால், காதுக்குள் இன்ப தேன் வந்து பாய்ந்த எபெக்ட் கிடைக்கும்.

சதீஷுடன் நடிக்கும்போது அவர் செய்யும் காமெடிகளில் சிரிக்காமல் இருப்பது எனக்கு பெரிய சவாலாக இருந்தது என்று குறிப்பிட்டார் துல்கர். ஒருவேளை விமர்சனங்கள் எதிர்மறையாக வருவதை உணர்ந்து ஜனங்களை சிரிக்க வைக்க ஹோம் வொர்க் பண்ணினாரோ என்னவோ?

பிரஸ்மீட்டில் பேசிய சதீஷ், “படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான தன்ஷிகா இங்கு வரல. எங்க வர விட்றீங்க?” என்றார் மறைமுகமாக டி.ஆரை தாக்கி.

பின்குறிப்பு- இப்படத்தில் துல்கர் சல்மான், நான்கு கெட்டப்புகளில் நடித்திருக்கிறார். நாலு பேருக்கும் தனித்தனி ஜோடி!

Leave A Reply

Your email address will not be published.