அரசியலுக்கு வந்தால் நியாயமாக நடப்பேன்! முதல் மணியை அடித்தார் ரஜினி!

4

பல வருஷமாகவே இதோ அதோ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்த தனது சந்திப்பை, வெகு கொண்டாட்டத்துடன் இன்று நடத்தினார் ரஜினி. ரசிகர்களை சந்திப்பது… அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வது… ஆகிய இரண்டு ‘மருதநாயகம் புராஜக்ட்’டும் இன்று நிறைவேறியதில் ரஜினிக்கும், அவரது ரசிகர்களுக்கும் ஒரு சேர மகிழ்ச்சி இருக்கலாம். அதே நேரத்தில் பல வருஷமாக ரஜினி பற்றி விமர்சித்த மீடியாவுக்கு அவர் தந்த பதில், நெத்தியடி!

என்னுடைய படம் ரிலீஸ் ஆகிற சமயங்களில் மட்டும்தான் நான் ரசிகர்களை சந்திப்பேன்னு எழுதறாங்க. அதே மாதிரி அரசியலுக்கு வருவேன்னும் சொல்லாம வரமாட்டேன்னும் சொல்லாம இருக்கார்னும் எழுதறாங்க. அப்படியெல்லாம் இல்ல. குளத்துல கால் வைக்கப் போறப்பதான் தெரியுது… உள்ள நிறைய முதலைகள் இருக்குன்னு. உடனே காலை பின்னுக்கு இழுத்துக்குறோம். இல்ல.. இல்ல… இறங்குவேன்னு முரண்டு பிடிச்சா என்னாகும்?

ஆண்டவன் ஒரு கருவியா என்னை இயக்கிக்கிட்டு இருக்கான். இன்னைக்கு நடிகன். அவன் கொடுத்த வேலையை செஞ்சுகிட்டு இருக்கேன். நாளைக்கு என்னன்னு தெரியாது. ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால், நியாயமா இருப்பேன். பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சு கனவு காண்றவங்க, தயவுசெய்து சொல்றேன்… இப்பவே கிளம்பிடுங்க என்றார்.

முன்னதாக தனது ரசிகர்கள் சிலர் மீதும் பகிரங்கமாக அவர் குற்றம் சாட்டினார். “சில ரசிகர்கள் அரசியல்வாதிகளுக்கு துணை போறங்க. அவங்க கொடுக்கிற பணத்தை வாங்கி ருசி பார்த்துட்டாங்க. அதனால் எனக்கு கடிதம் எழுதறாங்க. நாங்க எப்ப எம்.எல்.ஏ. ஆகுறது? நாங்க எப்ப மந்தியாகுறது? நாங்க எப்ப பணம் சம்பாதிக்கறது?”ன்னு. அரசியல்வாதிகளும் இவங்களை நல்லா பயன்படுத்திக்கிறாங்க” என்றார்.

இந்த சந்திப்பில் ரஜினி பேசியதை கூட்டிக் கழித்துப் பார்த்தால், நான் வந்திட்டேன்னு சொல்லு. திரும்ப அரசியலுக்கு வந்திட்டேன்னு சொல்லு என்பதை போலவே இருந்தது!

முதலைகள் இல்லாத அரசியல் ஏது? வந்துருங்க எசமான்!

4 Comments
 1. Kannan says

  தலைவா வாருங்கள். தமிழகம் மீண்டும் வளர்ச்சி பெற வாருங்கள். அரசியலுக்கு வாருங்கள்.

 2. Ramana says

  என்ன அந்தன்னன்? “இன்னும் எத்தனை காலத்துக்கு யூகத்திலேயே வண்டிய உருட்றது? வந்துருங்க… பார்த்துக்கலாம்!” என்ன ஒளரற? ரஜினி கேன பு கிழட்டு கு வந்தா என்ன, இல்ல செத்தா என்ன? ஏமாத்துக்காரன், அந்த நாயே தமிழன் காசை சம்பாரிச்சுருச்சுல, கர்நாடகாவுலயோ இல்ல மஹாராஷ்டிராவுலயோ முதலீடு பண்ணி தமிழனை செருப்பால அடிக்க சொல்லுங்க. அப்பாவது நம்மாளுங்களுக்கு புத்தி வருதான்னு பாக்கலாம்.

 3. பாரதிதமிழன் says

  தமிழக நலன் காக்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் அரசியல் களம் காண வேண்டும்.

 4. ஜீவா says

  தலைவா எங்கள் இறைவா, சீர்கெட்டு போயிருக்கும் தமிழகத்தை காப்பாற்ற முன் வர வேண்டும்.
  வாழ்க தமிழகம், வாழ்க தமிழ் மக்கள்

Leave A Reply

Your email address will not be published.