கருணாசை கை கழுவினாரா திருநாள் பட இயக்குனர்?

0

ஒரு பிளாஷ்பேக்கை சொல்லிவிட்டு இந்த செய்தியை சொன்னால், வெந்த சிக்கன்ல விரலை விட்ட எபெக்ட் கிடைக்கும்! சில மாதங்களுக்கு முன் வந்த வெளிவந்த ‘சிகரம் தொடு’ என்ற படத்தில் விக்ரம் பிரபுவுக்கு நண்பராக நடிக்க ஒருவரை தேடினார்கள். கருணாஸ் இருந்தால் நல்லாயிருக்குமே என்று இயக்குனர் அபிப்பிராயப்பட, நேரே கருணாஸ் வீட்டு கதவை தட்டிவிட்டார்கள். திறந்தால், மிக நீண்ட தலைமுடியுடன் என்ட்ரி கொடுத்தார் அவர். “சார்… விக்ரம் பிரபுவுக்கு பிரண்டா நடிக்கணும். ஆனால் நீங்க இவ்ளோ முடி வச்சுருக்கீங்களே?” என்று கவலைப்பட, “இந்த முடியோடவே நடிக்கிறேனே?” என்றார் அவர்.

ம்ஹும் இயக்குனருக்கு சரிப்பட்டு வரவில்லை. “நல்ல கதை. நீங்க முடியை தியாகம் பண்ணினா நல்லாயிருக்கும்” என்று கடைசியாக ஒரு தூண்டிலை போட்டார். “இல்ல பிரதர். நான் அம்பா சமுத்திரத்தில் அம்பானி படத்தில் அறிமுகப்படுத்திய டைரக்டர் ராம்நாத்தோட அடுத்த படத்தின் கெட்டப் இது. நான் இப்போ முடியை வெட்டிட்டா மறுபடியும் வளர பல மாதங்கள் ஆகிடும். அவன் மனசு சங்கடப்படும். இந்த படத்தை நான் விட்டுடுறேன்” என்றார் கருணாஸ்.

அந்த டைரக்டர் இயக்குகிற படம்தான் ஜீவா நயன்தாரா நடிக்கும் திருநாள். இந்த படத்தின் பத்திரிகை குறிப்புகளில் கருணாஸ் பெயரும் இல்லை. ஜீவாவுடன் சேர்ந்து நடிக்கும் நடிகர்களின் புகைப்படங்களில் கருணாஸ் முகமும் இல்லை. ஒருவேளை கருணாசின் அந்த கேரக்டரை யாருக்கும் சொல்லாமல் சஸ்பென்சாக வைத்திருக்கிறாரா, அல்லது படத்தில் கருணாசே இல்லையா?

இருந்தால் நல்லது. இல்லாவிட்டால், இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பான்னு கடந்து போய்விட வேண்டியதுதான்!

Leave A Reply

Your email address will not be published.