போலந்து நடிகை நடித்துள்ள குறும்படம்  ‘இந்தியன் டூரிஸ்ட்’

0

தமிழில் ஒரு குறும்படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த நடிகை நடித்துள்ளார்.  இக் குறும்படம் பார்பிக்யூ நேஷன் அனுசரனையுடன்  காமன் மேன் மீடியா  வழங்கும் படைப்பாக உருவாகியிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் ஒரு சுற்றுலாப் பயணி சந்திக்கும் நல்ல, கெட்ட அனுபவங்கள்தான் கதையின் அடிப்படை .

இங்கு வரும் அவர்களுக்கு நேரும் கசப்பான அனுபவத்தின் மூலம் நம் இந்திய நாடு பாதுகாப்பற்ற நாடு என நினைக்கிற நிலை உள்ளது. ஆனால் சில இனிப்பான அனுபவங்களைக் காட்டி இந்தியாஅப்படிப்பட்ட தேசமல்ல என்று வெளிநாட்டினரை  உணர வைப்பது போலுள்ளது கதை.

பிரதான பாத்திரமாக போலந்து நாட்டிலிருந்து மாமல்லபுரம் வருகிற சுற்றுலாப் பயணியாக டொமினிக்கா காமின்ஸ்கா  நடித்துள்ளார். இவர் போலந்துக்காரர் .

வேறு துணை பாத்திரங்களும் வருகின்றன.

கே.பி. செல்வா, காமன் மேன் சதிஷ், ரேக்ஸ், சண்முகம் , தேவ்காளிதாசன், சுபுசிவா, விஷ்ணு ஆனந்த், விஜயன், சக்தி சரவணன், பார்த்தி, சத்யன் என இளைஞர்களின் கூட்டணியில் இக்குறும்படம்உருவாகியுள்ளது.
இக் குறும்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் திரு. முரளி இன்று வெளியிட்டார்

‘காமன் மேன்  மீடியா’ என்கிற பெயரில் திரைப்படங்களுக்கு பல்வேறு வகையில் விளம்பரங்கள் ,சந்தைப்படுத்துதல்  என்று ஈடுபட்டு வந்த சதிஷ் , அடுத்ததாகக் குறும்பட முயற்சியில் இறங்கியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave A Reply

Your email address will not be published.