கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பா?

0

படத்தில் வில்லனாக நடித்தாலும், நிஜத்தில் ஹீரோவாக வாழ்ந்தவர் கலாபவன் மணி. ஒரு ஆட்டோ ஓட்டுனராக தன் வாழ்வை துவங்கியவருக்கு, சினிமா கொடுத்த அதிர்ச்சிகளில் ஒன்றுதான் மரணம்! இன்றளவும் அவரது மரணம் மர்மமாகவே இருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன், பாவனா விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திலீப்புக்கும் கலாபவன் மணிக்கும் ரியல் எஸ்டேட் தொடர்பாக சம்பந்தம் உள்ளது. அதனால் மணியின் மரணம் தொடர்பான விசாரணையில் திலீப்பையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

திலீப் உள்ளே போன பின்புதான் அவர் எவ்வளவு பெரிய தாதாவாக இருந்திருக்கிறார் என்ற விபரங்கள் கசிய ஆரம்பித்திருக்கின்றன. ஒருவேளை கலாபவன் மணி விஷயத்திலும் திலீப்பின் கோர முகம் வெளிப்பட்டால், அவர் தப்பிக்க வாய்ப்பே இல்லை.

Leave A Reply

Your email address will not be published.