குறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா? பொருந்த சொல்லுங்க புண்ணியவானுங்களே

0

கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில் லட்சமும் கோடியும் கொட்டுகிறதென்றால் யாராவது சும்மாயிருப்பார்களா? விரல் இருக்கிறவர்கள் எல்லாம் மியூசிக் போடக் கிளம்பிவிடுவார்களே?

சிம்பு அண் பேமிலியிலிருந்து கிளப்பிவிடப்படும் தகவல்கள் கிட்டதட்ட அப்படிதான் இருக்கிறது. பேசாம ஆடு மேய்க்கறதை விட்டுப்புட்டு நாலைஞ்சு படத்துக்கு மியூசிக் போடலாம்னு இருக்கேன் என்று தினமும் லாரி பிடித்து ஆட்கள் வந்து இறங்காமலிருந்தால் போதும் என்கிற அளவுக்கு மிதப்பை ஏற்றி விடுகிறது அந்த செய்தி. சிம்பு நயன்தாரா ஜோடியாக நடித்து, பாண்டிராஜ் இயக்கியிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு சிம்புவின் தம்பி குறளரசன்தான் இசையமைப்பாளர். “அவரால ஒரு பாட்டு கூட சொன்ன நேரத்துக்கு தர முடியல. இன்னும் ரெண்டு பாட்டு வரவேயில்ல” என்று போன வாரம் வரை பாண்டிராஜ் பேஸ்புக்கில் வந்து புலம்பியதையெல்லாம் நாடு மறந்திருக்காது. அப்படிப்பட்ட குறளரசன் இசையமைத்த அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு உரிமை சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக கதையளக்கிறார்கள் இங்கே.

மார்க்கெட்டில் புகுந்து விசாரித்தால், மவுத்திலிருந்து வார்த்தையே வராது போல இருக்கிறது. அந்தளவுக்கு இட்டுக்கட்டிய, கட்டு சோறாக இருக்கிறது அந்த தகவல். வேறொன்றுமில்லை… இருபத்தைந்து லட்சத்திற்குதான் பேசப்பட்டுள்ளதாம் இப்படத்தின் ஆடியோ வியாபாரம். தமிழுக்கு மட்டும் இந்த ரேட் என்றாலும், தெலுங்கில் கொஞ்சம் தர்றோம் என்று கூறியிருக்கிறார்களாம். ஆக கூட்டி கழித்து கெஞ்சிப் பார்த்தால் கூட, நாற்பதை எட்டாது என்கிறார்கள் ஆடியோ மார்க்கெட்டில்.

பில்டப் தேவைதான். அதுக்காக…?

Leave A Reply

Your email address will not be published.