ஜெய் அஞ்சலி காதல் முறிவு! பலூன் பிரமோஷனுக்கு ஜோடியாக வருவார்களா?

0

ஜெய்க்கு இப்போது கொழுத்த ராவு காலம்! குடித்துவிட்டு கார் ஓட்டி ஆறு மாத காலம் லைசென்ஸ் இல்லாமல் அவதிப்பட இருக்கிறார். நடுவில் பிடிவாரண்ட் வேறு. எப்படியோ…. கார் ஓட்டும் லைசென்ஸ் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டதால் தனது டூவீலரில் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். இது ஒருபுறம் இருக்கட்டும். அஞ்சலி ஜெய்யின் காதல் முறிவுதான் மிக முக்கியமான விஷயம்.

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பலூன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ஒரு படம் ஓட வேண்டும் என்றால், அப்படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்களுக்கு இடையில் காதல் பற்றிக் கொண்டதாக வதந்தி கிளப்பி விடுவார்கள். ஆனால் இங்கு நிஜத்திலேயே காதல் வசப்பட்ட ஜோடி, கரெக்டராக ரிலீஸ் நேரத்தில் புட்டுக் கொண்டதால் படக்குழுவினருக்கு தர்ம சங்கடம். படத்திற்கு எவ்வித கட்டும் இன்றி U/A சான்றிதழ் வாங்கியும் மனசோரத்தில் மக்கர் பண்ணுகிறது ட்யூப் லைட். ஏன்? ஏன்?

ரிலீஸ் நேரத்தில் புரமோஷனுக்கு இருவரையும் ஒன்றாக அழைத்து டி.வி ஷோக்களில் தலைகாட்ட வைத்துவிடலாம் என்று நினைத்திருந்தார்கள். அது நடக்குமா என்பதுதான் இப்போதைய சங்கடம். நல்லநேரத்திலேயே ஜெய் பட பிரமோஷன்களுக்கு வர மாட்டார். இப்போது லவ்வும் டமால் ஆகிவிட்டதா? வந்த மாதிரிதான்!

Leave A Reply

Your email address will not be published.