நாறிய இமேஜ்! மாறிய ஜெய்! ஒரே வாரத்தில் உல்டா!

0

கிளிக்கூட்டத்தில் விழுந்த கொய்யாப்பழம் போல, உடம்பு முழுக்க ரணமாகிக் கிடப்பது தயாரிப்பாளர்கள்தான். எல்லா சினிமாவிலும் வேறு வேறு க்ளைமாக்ஸ்கள் இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரை பொருத்தவரை ஒரே க்ளைமாக்ஸ்தான்! ‘வச்சு சாவடிச்சுட்டாங்களே…’ என்பதுதான் அது. அண்மையில் வந்த ஆக் ஷன், சங்கத்தமிழன் வரைக்கும் அதுதான் ஃபேக்டு!

இந்த லட்சணத்தில் தன்னை நம்பி வந்த தயாரிப்பாளர்களுக்கு முடிந்தவரை விஷம் வைத்து ஊட்டிக் கொண்டிருந்த ஜெய், திருந்திவிட்டார் என்பது எவ்வளவு பெரிய நல்ல செய்தி?! ஜெய்யை பற்றிய நல்ல செய்தியும், கெட்ட செய்தியும் உலாவியது கூட இந்த ஒரே வாரத்தில்தான்! ஜெய் அஞ்சலி ஜோடியை வைத்து படம் எடுத்த போஸ்டர் நந்தகுமார், படப்பிடிப்பில் தன்னை ஜெய் பாடாய் படுத்திய கதையை வீடியோ பேட்டியாக கொடுத்திருந்தார். ஷுட்டிங்கை நிறுத்திக் காட்றேன் பாரு… என்று சவால் விட்டு அதை செய்தும் காட்டியவரைப் பற்றி புலம்பியிருந்தார்.

பேட்டி வந்த அதே வாரத்தில்தான் ‘கேப்மாரி’ பிரஸ்மீட். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி தயாரித்திருக்கிற படம். ‘தினந்தோறும் எட்டு மணிக்கு டாண்ணு ஷுட்டிங் வந்திடுவார். கிட்டதட்ட ஒரு மாதம். ஒரு நாள் கூட அவர் லேட் பண்ணியதில்ல…’ என்று சர்டிபிகேட்டும் கொடுத்தார்.

தன் பட பிரமோஷன்களுக்கு வந்து பளக்க வளக்கமில்லாத ஜெய், இந்த பிரஸ்மீட்டுக்கு வந்து பல தர்மசங்கடமான கேள்விகளுக்கு பதிலளித்ததுதான் நல்ல சைன்!

ஆனாலும் கிழிஞ்சு கந்தலான சட்டையை அயர்ன் பண்ணி என்ன ஆவப்போவுது?

Leave A Reply

Your email address will not be published.