ஃப்ரண்டீய்… ஃபீல் பண்ணுவாப்ல… இறங்கி வந்த ஜெய்!

0

நிதின் சத்யா ஏழெட்டு படங்களில் நடித்துவிட்டார். அதில் சிலவற்றில் ஹீரோ! இருந்தாலும், கோடிக் கணக்குல பணத்தை கொட்டுகிற தயாரிப்புத் தொழிலுக்கு வந்தால் என்ன செய்வார்? தனக்கு தோதான ஆட்களை முதலில் தேடுவார் அல்லவா? அப்படி நிதின் சத்யா தேடிய முதல் நபர்தான் பிச்சுமணி. வெங்கட் பிரபுவின் அசோசியேட் டைரக்டர்.

“நான் படம் புரட்யூஸ் பண்ணப்போறேன். கதை சொல்லுங்க” என்று கேட்ட நிதினுக்கு இன்ப அதிர்ச்சி. ‘ஜருகண்டி’ என்ற கதையை ஸ்பீடா மீட்டரே அசந்து போகிற வேகத்தில் சொல்லி முடித்தாராம். ‘அப்படியே தூக்கு ஆளை…’ என்று பிச்சுமணியை கமிட் பண்ணிய நிதின், அப்புறமாக போய் நின்றது உற்ற நண்பன் ஜெய்யிடம். ஷுட்டிங்குக்கு வர்ற விஷயத்தில் இவர் இன்னொரு சிம்புவாச்சே? அங்குதான் அடுத்த ஷாக்.

அலட்டல் அசிங்கமெல்லாம் நண்பனிடம் எடுபடுமா? நிதினின் சொந்தப்படம் என்றதும் தினந்தோறும் ஷுட்டிங் வந்தாராம் ஜெய். அதுமட்டுமல்ல… இந்தப்படத்தை 42 நாட்களில் எடுத்தே முடித்துவிட்டார்கள். “ஜெய் என்னோட நண்பன்ங்கறதால சொல்லல. இந்தப்படத்தின் பின் தயாரிப்பு பணிகளிலும் இன்வால்வ் ஆகிட்டார் ஜெய். இன்னும் சொல்லப்போனா, இந்தப்படத்தின் மியூசிக் டைரக்டர் போபோ சசி ஜெய்யின் அண்ணன் மகன். மியூசிக் கம்போசிங்ல ஜெய்யின் பங்கு ரொம்பவே இருந்திச்சு” என்கிறார் நிதின் சத்யா.

மலையாளத்தில் ஒரே ஒரு ஹிட் படத்தில் நடித்துவிட்டு, பி.எச்.டி படிப்புக்காக அமெரிக்கா கிளம்பிக் கொண்டிருந்த ரெபா மோனிக்காவை வம்படியாக இழுத்து வந்து ஹீரோயினாக்கிவிட்டார்கள். “அவ்வளவு அழகு, அவ்வளவு பாந்தமான நடிப்பு. வேணும்னா பாருங்க. அவங்க பி.எச்.டி படிப்பு இன்னும் பல வருஷத்துக்கு தொடர முடியாதளவுக்கு வாய்ப்பு குவியும்” என்றார் நிதின். (ஒருத்தரோட படிப்பை கெடுக்கறதுல அவ்வளவு சந்தோஷமா ப்ரோ?)

ஆமாம்… ஜருகண்டின்னா என்ன? இதானே வேணான்றது. திருப்பதிக்கு போன எல்லாருக்குமே இந்த வார்த்தை பரிச்சயம் ஆகியிருக்கும். க்யூவில் நிற்கும் பக்தாளிடம், “போங்க… சீக்கிரம் போங்க” என்பதைதான் தெலுங்கில் ஜருகண்டி என்பார்கள். எல்லா லாங்குவேஜுக்கும் அறிமுகமான ஒரே வார்த்தைன்னா அது இதுதான் என்றார் நிதின்.

சரிதான்டீய்!

Leave A Reply

Your email address will not be published.