பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது! முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரஜினிகாந்த் கண்ணீர் அஞ்சலி!

4

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சார்பில் இன்று அஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. ஏராளமான நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மருமகன் தனுஷுடன் வந்திருந்தார். நா தழுதழுக்க அமைந்திருந்தது அவரது அஞ்சலி உரை.

1996ல் அவங்களுக்கு எதிரா நான் வாய்ஸ் கொடுத்தேன். அந்த தேர்தலில் அவங்க தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தேன். அவர் மனம் கஷ்டப்பட காரணமாக இருந்தேன்

அதற்கப்புறம் என் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைப்பதற்காக தர்ம சங்கடத்துடன் ஜெ.விடம் அப்பாயின்மெண்ட் கேட்டேன். உடனே கிடைத்தது. வரமாட்டார் என்று முடிவெடுத்திருந்தேன். ஆனால் கழக திருமணம் இருந்தாலும், நான் நிச்சயம் வருவேன் என கூறி கலந்துகொண்டார். அப்படி பட்ட பொன் மனம் கொண்டவர் இப்போது எங்களுடன் இல்லை…

புரட்சி தலைவி வைரம். ஆண் ஆதிக்க சமூகத்தால் அழுத்தப்பட்டு வைரமாக மின்னியுள்ளார். அவர் போனபிறகு கோடானகோடி மக்களின் கண்ணீரால் கோஹினூர் வைரமாக புரட்சி தலைவரின் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். 2 வயதில் தந்தை, 22 வயதில் தாயை இழந்தார்.. உடல் நிலை சரியில்லாத நிலையிலும் தேர்தல் பிரச்சாரம் செய்து அதிமுகவை அரியணை ஏற்றியவரை இறைவன் அழைத்துவிட்டார். அவர் போல் சோதனைகளை சாதனைகளாக மாற்றியவர் யாரும் இல்லை.

பெரியாத்மா மகாத்மா ஆகிவிட்டது. என்னுடைய கண்ணீர் அஞ்சலி!

இவ்வாறு பேசி முடித்த ரஜினியின் கண்களில் கவலை மேகம் சூழ்ந்திருந்ததை அங்கிருந்த பலராலும் கவனிக்க முடிந்தது.

4 Comments
 1. தமிழரசன் says

  Long Live Our Tamil God Super Star Rajini

  தலைவா வாழ்த்துக்கள்.

 2. ராஜன் says

  சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மனதில் ஒன்றை வைத்து வெளியில் போலியாக பேச தெரியாதவர். அவர் பேசியது அனைத்தும் உண்மை.

 3. Bhuvana says

  வாழ்க சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள்.

 4. செல்வம் says

  சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியல் நாகரிகம் பண்பாடு அறிந்தவர்.
  எதிரியே இருந்தாலும் அவர்கள் இறந்தால் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவது தான் தமிழர் பண்பாடு.

Leave A Reply

Your email address will not be published.