போகன்- முன் பதிவில் ஒரு ஷோ கூட புல் ஆகலயே? ஜெயம் ரவி பேரதிர்ச்சி!

1

கொட்டாச்சி, நண்டு ஜெகன் ஹீரோவாக நடித்தால் கூட “என்னய்யா நடக்குது அங்கே?” என்று ஒரு கூட்டம் எட்டிப்பார்க்கும். ஆனால் சமீபகாலமாக ஜெயம் ரவிக்கு அந்த கொடுப்பினை கூட இல்லை! மிருதன் படத்திற்கு பின்னே ஜெயம் ரவிக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கொடூர கொடுப்பினை, இன்டஸ்ட்ரியில் பிற ஹீரோக்களுக்கும் விடப்பட்ட எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

அப்படி என்னய்யா நடந்திருச்சு?

வேறென்ன? நாளை திரைக்கு வரப்போகும் போகன் படம், போலீஸ் வாழ்க கோஷத்தை அடிப்படையாக கொண்ட படம். போலீஸ் என்றாலே பொசுங்குன வாடை அடிக்குதே என்று மூக்கை பொத்திக் கொள்கிற அளவுக்கு கடந்த வாரத்திலிருந்தே பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் தமிழர்கள். அதுவும் முக்கியமாக இளைஞர்கள். இந்த நேரத்தில் போலீஸ் புகழ் பாடும் போகனுக்கு வரவேற்பு எப்படியிருக்கும்? அதை தெரிந்து கொள்ள தியேட்டர் முன் பதிவு சார்ட்டை நோட்டம் விட்டால், செம ஷாக்.

இன்னும் ஒரு தியேட்டர் கூட முன் பதிவில் புல் ஆகவில்லை. வாங்க வாங்க… தியேட்டரே காலியா கிடக்கு என்று அழைக்கிறது அந்த பச்சை நிற சார்ட். இதை அறிந்த ஜெயம் ரவி பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறாராம்.

உடனடியாக தனது ரசிகர் மன்றத்தை தூண்டி விட்டு தியேட்டரை புல் ஆக்கும் முயற்சிகள் நடக்கிறதாம். ஒரு ஹீரோன்னா எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு?

1 Comment
  1. Senthil says

    Now people are not yet read for cop movies. They need time to digest. cop stuff. Then Singam3 should be postponed to April 14. Otherwise this singam police could be a flop to distributors who paid hefty sum..

Leave A Reply

Your email address will not be published.