ஜி.வி.பிரகாஷ் நிக்கி கல்ராணி காலத்தில், ஜெயராம் ரம்யா கிருஷ்ணன் காதலா? குழப்புறாங்ய்களே…!

0

“ஆவி பறக்க சாப்பாடு கேட்டா, தட்டை தூக்கிக்கிட்டு ஆவியே பறந்து வருதேய்யா…” என்கிற அளவுக்கு கோடம்பாக்கம் எங்கும் ஆவிகளின் சீசன்! நல்ல நல்ல கதைகளில் கூட, “எப்படியாவது ரெண்டு ஆவிய புகுத்துங்கப்பா. அப்பதான் யாவாரம் ஆவுது” என்று டைரக்டர்களை தொண்டை தண்ணி வறள வைக்கிறார்கள் விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும்.

இந்த சூழ்நிலையில்தான் ‘தெம்பா வர்றோம், திகில் திகிலா தர்றோம்’ என்று கிளம்பி வந்திருக்கிறது செண்பகக் கோட்டை! மலையாளத்தில் ‘ஆடு புலி ஆட்டம்’ என்ற பெயரில் வெளியாகி சக்கை போடு போட்ட படம்தான் இந்த ‘செண்பகக் கோட்டை’. “டூயல் லாங்குவேஜ் பிலிமாதான் ஆரம்பிச்சோம். முதல்ல மலையாளத்துல முடிச்சுட்டோம். தமிழ்ல கொஞ்சம் எக்ஸ்ட்ரா சீன்கள் எடுக்க வேண்டியதாப் போச்சு. அதனால்தான் லேட். ஆவியா இருந்தாலும் நாள் கிழமை, தியேட்டர் நிலவரம் பார்த்து வரணும்ல? அதனால் வெயிட்டிங். அநேகமா இந்த மாசம் எண்ட்டுல வந்துருவோம்” என்கிறார் படத்தின் இயக்குனர் கண்ணன் தாமரைக் குளம்.

ஜெயராமன் ரம்யா கிருஷ்ணனை லவ் வழிய லுக் விட்டு, சாமர்த்தியமாக லவ்வை சொல்வது போலெல்லாம் காட்சிகள் இருக்கிறது. “ஏங்க… ஜி.வி.பிரகாஷ் நிக்கி கல்ராணிக்கு லுக் விடுற காலத்தில், ஜெயராம் ரம்யா கிருஷ்ணனை காதலிக்கறதையெல்லாம் ஜனங்க ஏத்துப்பாங்களா?” என்று கேட்டால், பேய் சிரிப்பு சிரிக்கிறார் டைரக்டர் கண்ணன். “அங்கதான்ங்க இந்த படத்தோட வெற்றியே இருக்கு. தியேட்டருக்கு வந்து பாருங்க. அலற விடுறோம்” என்றார்.

நிஜமாகவே அலற விட்ருவாய்ங்களோ?

பின்குறிப்பு- இந்த படத்திற்கு வசனம், நடிப்பு இயக்கம் நகைச்சுவை என்று கொடி கட்டிப் பறக்கும் சித்ரா லட்சுமணன்! பேயை சிரிக்க விடுவீங்களா, அலற விடுவீங்களா?

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.