ஜீவாவின் அதிரடி முடிவு? சக ஹீரோக்கள் திகைப்பு
காக்காயெல்லாம் மயிலாகிட்டு வருது. இந்நேரத்தில் இன்னும் இறுக்கிக் கொண்டிருந்தால், இருக்கிற இடமும் இழுபறிதான் என்பதை மிக சரியான நேரத்தில் உணர்ந்துவிட்டார் ஜீவா. தேவை… முகமூடி போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் அல்ல. கதைதான் பெரிய பட்ஜெட் என்பதை சற்று தாமதமாக உணர்ந்தாலும், சம்பளமும் கூட அந்த கதைகளுக்கு குறுக்கே நின்றுவிடக் கூடாது என்று நினைத்தாராம். அதன் விளைவாக அவர் எடுத்த அதிரடி முடிவுதான் பல போட்டியாளர்களிடம் உதறலை ஏற்படுத்தியிருக்கிறது.
சாதாரணமாக மூன்று கோடி வரை சம்பளம் கேட்டுக் கொண்டிருந்த ஜீவா, அதிரடியாக தன் சம்பளத்தை ஒன்றரை கோடியாக குறைத்திருக்கிறார். தான் விட்டுக் கொடுத்த அந்த ஒன்றரை கோடியையும் சேர்த்து படத்தில் நல்ல ஹீரோயின்கள் இருக்கட்டும்…. நல்ல டெக்னீஷியன்கள் இருக்கட்டும் என்கிறாராம். சந்துக்கு சைக்கிள் பெல் அடிச்சாலே ஜில்லா முழுக்க பரப்பிவிட்ருவாய்ங்களே…. ஜீவாவின் இந்த முடிவு கோடம்பாக்கத்தை ஒரே நாளில் எட்டிவிட, சாரை சாரையாக அவர் பக்கம் குவிய ஆரம்பித்திருக்கிறது படங்கள்.
சுமார் ஆறு படங்களுக்கு அவர் ரிசர்வ் செய்துவிட்டதாகவும் கேள்வி. இந்த ஆறும் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் தரக்கூடிய படங்கள் என்றால் நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். எல்லாமே களவாணி மாதிரியான கலகல சப்ஜெக்ட்டுகளாம். ஜீவா மாதிரி யாராவது ஒருவர் கன்னுக்குட்டி கொம்புக்கு கலர் சாயம் பூசுனாதான் மற்றவங்களும் அந்த ஸ்டைலை பின்பற்றுவார்கள். அதனால்…
கும்புட்டுக்குறோம் ஜீவாண்ணே….