திரவியம் நாடாரின் பெருமையை காப்பாற்றுவாரா ரஜினி?

1

ஒரிஜனல் எண்ணையில் செய்யப்பட்ட போலி பணியாரமாக இருந்துவிடக் கூடாது காலா! மற்றவர்களுக்கு இது வெறும் சினிமா. ஆனால் தன் அப்பாவை மாவீரன் அலெக்சாண்டராகவே பார்த்த மகளுக்கு எப்படி இது வெறும் படமாக இருக்கும்? இப்படியொரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது ரஜினியின் ‘காலா’.

திருநெல்வேலியிலிருந்து மும்பைக்கு சென்ற ஒரு தாதாவின் கதைதான் இது என்று பளிச்சென கூறிவிட்டு படம் பிடிக்க கிளம்பிவிட்டார் பா.ரஞ்சித். அதற்கப்புறம் உலகம் இந்தப்படத்தை பற்றி குடைய ஆரம்பிப்பது இயற்கைதானே? யார் அவர்? அவரது வாரிசுகள் எங்கே? இப்படியெல்லாம் தேடியவர்களுக்கு சுலபத்தில் அகப்பட்டுவிட்டார் விஜயலட்சுமி. பா.ரஞ்சித் சொன்ன அந்த தாதாவின் மகள். ஆனால் “உங்க அப்பா திரவியம் நாடாரின் கதை இதுவல்ல” என்று விஜயலட்சுமியிடம் கூறிவிட்டாராம் ரஞ்சித்.

காலா படத்தின் முதல் லுக் போட்டோவில் ரஜினி ஒரு ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். அதில் எழுதப்பட்டுள்ளது வண்டி எண் 1956. அதே வருடம்தான் என் அப்பா மகாராஷ்டிரா தாராவி பகுதியில் சிங்கம் போல வாழ்ந்தார் என்கிறார் விஜயலட்சுமி. ரஞ்சித்தை தொடர்பு கொண்டு பேசினாராம். “நான் பீரியட் பிலிம் எடுக்கல. நிகழ்கால ஹீரோயிச கதை அது” என்று கூறிவிட்டாராம் அவர். நிகழ்கால கதை என்றால் விஜய் அஜீத் போன்ற யங் ஹீரோக்கள்தானே நடிக்கணும்? ரஜினி நடித்தால் அவர் வயசுக்கு அது எப்படி நிகழ்கால கதையாக இருக்கும் என்கிறார் விஜயலட்சுமி.

“நான் இந்த கதைக்காக எந்த உரிமையும் கேட்கப் போறதில்ல. பணம் என்னுடைய நோக்கம் அல்ல. எங்கப்பா மறைவின் போது தானாக திரண்ட தமிழர்கள் இரண்டு பிரமாண்டமான வண்டிகளை ஏற்பாடு செய்து லாரி நிறைய பூக்கள் கொண்டு அவரை அர்ச்சித்து மும்பை மாநகரத்தையே எட்டு மணி நேரம் சுற்றி வந்து அடக்கம் செய்தார்கள். அப்படி மக்களின் நாயகனாக இருந்தவரின் கதையில் பொய் கலந்து விடக் கூடாது என்பதால்தான் கேட்கிறேன். வேறொன்றுமில்லை” என்கிறார் விஜயலட்சுமி.

ஒரே அச்சம்தான் இப்போது. போன படத்தில் இறக்கிவிட்ட மாதிரி சாதிய இறக்கிவிட்டு பீதிய கிளப்பிடாதீங்கய்யா…

1 Comment
  1. தமிழ் நேசன் says

    தலைவா எங்கள் இறைவா . ஆண்டவன் அருளால் நீங்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    தலைவரின் அரசியல் வருகை உண்மையான தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் காத்துக்கொண்டு இருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.