ரஜினியின் நிஜ முகம்! பல்வேறு நாடுகளில் காலா நிலைமை என்ன?

1

ஆறுதல் சொல்லப்போன ரஜினி, “இந்தா வச்சுக்க… ஆளுக்கொரு குத்து” என்று வாரி வழங்கிவிட்டு வந்திருக்கிறார். ரஜினியின் இமேஜ், ‘தூத்துக்குடி விசிட்டுக்கு முன்… தூத்துக்குடி விசிட்டுக்கு பின்’ என்று இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுவிட்டது. வெறி பிடித்த ரஜினி ரசிகர்களே கூட, “தலைவா… கொண்டைய மறைங்க” என்று கூக்குரல் போட வேண்டிய நிலைமை. மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு ஆதரவு என்கிற ரஜினியின் ஆபாசக் கொண்டையை இனி வெட்டி எறிந்தால் கூட, மக்களின் மனசு அந்த கருப்பு உருண்டையை மறப்பதாக இல்லை.

முக்கியமாக, காக்கிக்கு ஆதரவான ரஜினியின் நிலைப்பாடு தடியடிக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் தப்பிய உள்ளங்களுக்கு கூட கசப்போ கசப்புதான். மக்களின் எண்ணம் ஒன்றாகவும், ரஜினியின் கருத்து இன்னொன்றாகவும் இருக்கும் இந்த நேரத்தில், தானாகவே ரஜினி வெறுப்பு அலைவீச ஆரம்பித்திருக்கிறது. அதுவும் நாடெங்கிலும்.

காலாவின் ரிசல்ட், ரஜினி கட்சி தொடங்க வேண்டுமா? அல்லது எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு அப்படியே ஓட வேண்டுமா என்பதை தீர்மானித்துவிடும். அதற்கு முன், விளையுற முள்ளங்கி வேர்லயே அழுகுன கதையாக காலாவை வெளியிடப் போவதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார்கள் அயல்நாடு வாழ் தமிழர்கள். குறிப்பாக இந்த விஷயத்தை வெளிப்படையாக அறிவித்து மற்ற நாடுகளுக்கும் பற்ற வைத்த பெருமை நார்வே வசீகரனுக்கு சென்று சேர்ந்திருக்கிறது.

ரஜினியின் முந்தைய படங்களை நார்வே மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் வெளியிட்டு வந்தவர் அவர். இங்கு மட்டும் சுமார் 2 லட்சம் தமிழர்கள் பார்த்து மகிழ்ந்து வந்த ரஜினி பட வரிசையில், காலா இல்லை.

தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திய ரஜினிக்கு ஏதோ எங்களால் முடிந்த எதிர்ப்பு என்கிறார் வசீகரன்.

இவரைப்போலவே பல்வேறு நாடுகளில் காலா ரிலீஸ் இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏன்? வெளிநாட்டில் கொடி கட்டி பறக்கும் தமிழர் நிறுவனம் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது லைக்கா. வெளிநாடு வாழ் தமிழர்கள் பலருக்கும் இந்த நிறுவனத்தின் மீது கடும் அதிருப்தி இருக்கிறதாம். இந்த தனிப்பட்ட காரணங்களுக்காகவும் காலாவை பழிவாங்க துடிக்கிறார்களாம் அவர்கள்.

ஆகமொத்தம் ரஜினி அரசியலில் கால் வைத்த நேரம், ஆந்தை கொட்டாவி விடுகிற அந்திம நேரம்! ரஜினி அவரையே அறியாமல் இன்னும் நிறைய பேசுவார். பேச வேண்டும்!

ஏனென்றால் ஒரு துளி வியர்வைக்கு ஏன்டா ஒரு பவுன் தங்கக் காசு கொடுத்தோம் என்று தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய நேரமும் இதுதானே?

1 Comment
  1. venkat says

    Sir,
    Rajini sonnathu sathara makkalkku purinuthu. Kulappa vendaam.

Leave A Reply

Your email address will not be published.