ரஜினி அச்சம்? காலா ஷுட்டிங் ரத்து!

1

பெப்ஸி படைப்பாளிகள் பிரச்சனை, பெரும் சூறாவளியாக அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆகஸ்ட் 1 ந் தேதி முதல் ஸ்டிரைக் என்று அறிவித்த தொழிலாளர் சங்கம், அதில் உறுதியாக நின்றும் விட்டது. இந்தப்பக்கம் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கமும், பார்க்கலாம் ஒரு கை என்று முடிவெடுத்துவிட்டது.

இதையடுத்து விஷாலின் துப்பறிவாளன், மற்றும் உதயநிதி, விஜய் ஆன்ட்டனி, சசிகுமார், ஆர்.கே.சுரேஷ், அரவிந்த்சாமி ஆகியோர் நடிக்கும் படங்களின் ஷுட்டிங் பெப்ஸி அமைப்பை சேர்ந்த ஊழியர்களின் துணையுடனே நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் ஷுட்டிங் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் “நான் தயாரிப்பாளர்கள் பக்கம்தான்” என்று அறிவித்திருந்தார் பா.ரஞ்சித். இந்த அறிவிப்புக்குப் பின் எவ்வித தயக்கமும் இல்லாமல் நடைபெற வேண்டிய காலா படப்பிடிப்பு ஏன் நடக்கவில்லை? ரஜினிதான் காரணமாம். தொழிலாளர்களுக்கு எதிராக முடிவெடுத்தால், நாளைக்கு நான் தொழிலாளர்களின் தோழன் என்று சொல்லிக் கொள்ள முடியாது. அதற்காக அவர்களின் முரட்டுப் போக்கையும், முன் கோபம் வரவழைக்கும் சம்பளங்களையும் ஒப்புக் கொள்ளவும் முடியாது. வேறு வழி? ரஜினிக்கேயுரிய சைலன்ட் வைத்தியம்தான் அரங்கேறியிருக்கிறது.

ஒரு விஷயத்தை சும்மா ஆறப் போட்டாலே அது தானாக சரியாகிவிடும் என்பார்கள் சன்னியாசிகள். ரஜினி ஒரு காவி கட்டாத சன்னியாசி என்பதுதான் நாம் பலமுறை உணர்ந்த விஷயமாச்சே?

1 Comment
  1. Prabhu says

    மொத்த தமிழகத்துக்கும் குரல் கொடுக்கும் கமல் தனது துறையில் வேலை நிறுத்தம் பற்றி வாய் திறக்க மறுப்பது ஏன் …. எல்லாம் ஊருக்கு உபதேசம் தானோ !

Leave A Reply

Your email address will not be published.