வீணாப்போன விஷால் கொள்கை! ஏறி அடிக்கும் காலா தியேட்டர் லிஸ்ட்!

0

உணர்ச்சி வேகத்தில் எதையாவது பேசிவிட்டு பிறகு தேமே என கண்டு கொள்ளாமல் இருப்பதில் விஷாலுக்கு நிகர் அவரே. “எவ்வளவு பெரிய படமா இருந்தாலும், அது ரஜினி சார் படமா இருந்தாலும் 220 தியேட்டர்களுக்கு மேல் போட முடியாது. இதுதான் எங்க புது ரூல்” என்று விஷால் கொக்கரித்தபோது, இவர் இன்டஸ்ட்ரியின் இரும்புக்குதிரைதான் போலிருக்கிறது என்று கைதட்டி மகிழ்ந்தது சங்கம்.

குதிரையின் கொள்கை, கொள்ளு மீல்ஸ் தின்றதோடு முடிந்துவிட்டது போலும். ஏன்?

இன்றைய நிலவரப்படி காலா ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் மட்டும் 500 ஐ தொட்டுவிட்டது. அதுவும் அட்வான்ஸ் கெடுபிடிகளால்தான் மற்ற தியேட்டர்கள் ஒதுங்கிக் கொண்டனவே தவிர, வேறு காரணம் இல்லை. அதையும் கொஞ்சம் தளர்த்தியிருந்தால் காலாவின் தியேட்டர் கபளீகரம் 800 ஐ நெருங்கியிருக்கும்.

“நான் எங்கங்க சொன்னேன்…?” ரேஞ்சில் அமைதிகாக்கும் விஷால், இனி உணர்ச்சிவசப்பட்டு முழங்கும்போது அருகிலிருப்பவர்கள் ‘காலா’ என்று ஒரு வார்த்தையை சொல்லி அடக்கிவிடுவது முக்கியம். இல்லையென்றால், இதுபோல பல கொள்கைகளை அறிவித்து பல்பு வாங்கிவிடுவார் விஷால்.

இதெல்லாம் தேவையா மிஸ்டர் க்ளீன்(போல்டு)

Leave A Reply

Your email address will not be published.