கடைக்குட்டி சிங்கத்திற்கும் பீட்டா தொல்லை! கூட்றா பஞ்சாயத்த…!

0

பிராணிகளை அடித்து பிரியாணி போட்டு வரும் நாடுகளில், இந்தியா மட்டும் ஏதோ தேவலாம்! ஆனால் உலகம் முழுக்க இயங்கி வருகிறது பீட்டா என்கிற பிராணிகள் நல வாழ்வு அமைப்பு. கோழியை அறுத்தா குற்றமில்ல. வான் கோழியை அறுத்தா வம்பு? என்னங்கடா உங்க சட்டம்? பசுவை கொன்னா தப்பு. பாம்பை அடிச்சா மெடலா? என்று குமுறி குமுறி ஒரு கூட்டம் அழுது கொண்டிருக்க… இந்த பீட்டாவின் ஒரே டார்க்கெட் சினிமாதான்.

“படத்துல ஒரு எறும்பு குறுக்கே போச்சே, அது சவுக்யமா இருக்கா? நல்லாயிருக்குன்னு ஒரு டாக்டர்ட ஒரு சர்டிபிகேட் வாங்கிட்டு வாங்க” என்று குடைச்சல் கொடுத்து வருகிறார்கள். சினிமா எடுக்கும்போது குறுக்கே மறுக்கே போகும் எருமை பூனைக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அளவுக்கு டார்ச்சர் இருக்கிற நேரத்தில், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கும் அப்படியொரு பிரச்சனை என்கிறார்கள் இன்டஸ்ட்ரியில். ஏன்?

படத்தில் ஒரு ரேக்ளா ரேஸ் எடுக்கப்பட்டதாம். அதை கண்டுபிடித்த இந்த பீட்டா, ஜல்லிக்கட்டுக்குதான் உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்திருக்கே ஒழிய, ரேக்ளா ரேசுக்கெல்லாம் அனுமதி கொடுக்கல. அப்புறம் ஏன் படத்துல அப்படியொரு காட்சி வச்சீங்க என்று குடைச்சலை ஆரம்பிக்க. கொதித்துப் போயிருக்கிறார்கள் படக்குழுவினர். எப்படியோ? கடைசி நேரத்தில் முறையாக வாதாடி படத்தை முழுசாக கொண்டு வந்துவிட்டார்களாம்.

இவர்களை அழைத்து மூன்று வேளையும் இலையையும் சருகையும் விருந்தாக போட்டால் என்ன?

Leave A Reply

Your email address will not be published.