கை விடப்பட்ட கடைசி விவசாயி? சினிமாவிலும் விவசாயி செல்லாக் காசுதானா?

0

காக்கா முட்டை மணிகண்டனை கொண்டாடாவிட்டால், வேறு யாரை கொண்டாடுவீர்கள்? ஆனால் நிஜ நிலைமையே வேற…. என் கடன் நல்ல படங்களை எடுப்பதே என்று மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கும் மணிகண்டன், சலங்கை ஒலி கமல்ஹாசன் மாதிரி இருமி இருமியே இன்டஸ்ட்ரியை விட்டு போய்விடுவார் போலிருக்கிறது.

அவரது ‘நோ காம்பரமைஸ்’ மைண்ட், பல தயாரிப்பாளர்களை பெருமூச்சு விட வைத்திருக்கிறது. கடைசியாக மணிகண்டன் இயக்கிய ‘ஆண்டவன் கட்டளை’, எந்த அரசு விவகாரங்களுக்கும் இடைத்தரகர்களை நம்பாதே என்ற கருத்தை மிக அழுத்தமாக சொன்ன படம். அற்புதமான படமும் கூட. ஆனால் அந்தப்படத்தில் விஜய்சேதுபதி, ரித்திகாசிங், யோகிபாபு ஆகியோர் இருந்தும், ‘கமர்ஷியல் கம்மியா இருக்குப்பா…’ என்று முணுமுணுத்தார்கள் விநியோகஸ்தர்கள்.

அதற்கப்புறமும் தனது ஸ்டைலை அவர் மாற்றிக் கொண்டாரில்லை. போகிற இடத்திலெல்லாம் நீங்க மாறணும் சார் என்றே மற்றவர்கள் சொல்ல, பெரும் எரிச்சலுக்கு ஆளாகிவிட்டாராம் அவர். இந்த நிலையில்தான் மணிகண்டன் இயக்க, ஈராஸ் என்ற கார்ப்பரேட் நிறுவனம் தயாரிக்கவிருந்த ‘கடைசி விவசாயி’ என்ற படம் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் உலவுகின்றன.

வழக்கம் போல படத்துல கமர்ஷியல் ஐட்டம் வேணும் என்று தயாரிப்பு தரப்பு மார்க் போட்டிருக்கிறது. போங்கய்யா நீங்களும் உங்க மார்க்கும் என்று கிளம்பிவிட்டாராம் மணி.

விவசாயி என்றால், சினிமாக்காரர்களுக்கு கூட இளப்பம் போலிருக்கிறது!

Leave A Reply

Your email address will not be published.