அஜீத்தின் புதிய காதல்கோட்டை 2017

0


இந்த செய்தியின் தலைப்பை பார்த்ததும், “அடப்பாவிகளா? காதல் கோட்டைங்கற நல்ல தலைப்பையும் ரீமேக்குங்கிற பேர்ல லபக்கிட்டாங்களா?” என்கிற டவுட் உங்களுக்கு வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். அதெல்லாம் ஒன்றுமில்லை. இது வேற…

ஏப்ரல் 24 அஜீத்தின் திருமண நாள். அவர்களின் திருமணத்தின் போது கூட இத்தனை அட்சதைகள் விழுந்திருக்குமா தெரியாது. நேற்று உலகம் முழுவதுமிருக்கிற அஜீத் ரசிகர்கள், இந்த தம்பதிக்கு பூமழை தூவி வசந்தங்கள் வாழ்க என்று பூமாரி தூவிவிட்டார்கள். ஒவ்வொரு ரசிகனின் தொலை தூர அன்பையும் அஜீத் ரசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவரது தரப்பு எல்லாவற்றையும் கவனித்து வந்தது. ஏன் அஜீத் பார்த்திருக்க வாய்ப்பில்லை? அங்குதான் வருகிறது இந்த காதல் கோட்டை கான்சப்ட்! அந்தப்படத்தில் அஜீத்தும் தேவயானியும் நேரடியாக பார்த்துக் கொள்ளாமலே காதலிப்பார்கள். இருவரும் சந்தித்துவிட மாட்டார்களா என்று தியேட்டரே தவியாய் தவிக்கும். காதலர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்ட அந்த வினாடி, தியேட்டர் அடைந்த பரவசம் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்க முடியாத திருவிழா!

நேற்றும் அப்படிதான் நடந்திருக்கிறது. பல்கேரியாவிருந்து பல நூறு கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் ஒரு பகுதியில் படப்பிடிப்பு. எல்லா வசதிகளும் நீக்கமற நிறைய படப்பிடிப்பு நடந்தாலும் ஒரே அசவுகர்யம்…. செல்போன் சிக்னல் அவுட்! காலையிலிருந்தே அஜீத்தை தொடர்பு கொள்ள ஷாலினியும், ஷாலினியை தொடர்பு கொள்ள அஜீத்தும் போராடிக் கொண்டிருக்க, ஒரு முயற்சியும் பலிதமாகவேயில்லை.

இன்னொருபுறம் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவும் பல்கேரியாவுக்கு போன் போட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். நல்லவேளை… இந்திய நேரப்படி நள்ளிரவில்தான் அஜீத்திற்கு ஷாலினியிடம் பேச முடிந்திருக்கிறது. இப்படி மறக்க முடியாத திருமண நாளாக்கிவிட்டது விவேகம் படப்பிடிப்பு.

அஜீத் பல்கேரியாவில் இருந்தாலும், தினந்தோறும் குடும்பத்தினரிடம், வீடியோ கால் மூலம் பேசிவிடும் வழக்கமுண்டு. ஆனால் பல்கேரியாவின் நேற்றைய அவுட்டோர் நம்ம ஊர் செல்போன் டவரின் புத்தியை காட்டி, இந்த ஆகர்ஷ தம்பதியை தவிக்க விட்டுவிட்டதே….!

Leave A Reply

Your email address will not be published.