ஆசைப்பட்ட பிற கட்சி பிரமுகர்கள்! கதவடைத்த கமல்!

0

குமுதம் இதழில் வெளிவந்திருக்கும் கமல் பேட்டி, மக்களின் பல விதமான சந்தேகங்களுக்கு பதிலளித்திருக்கும். ‘ஏன்யா… ஒரு பக்கம் இந்தியன் பார்ட் 2 ல் நடிக்கப் போறதா சொல்றாங்க. தலைவன் வருகின்றான் படமும் எடுத்தாக வேண்டுமாம். இந்த லட்சணத்தில் அவர் எங்கே கட்சி ஆரம்பிச்சு கடைய நடத்துறது?’ என்று கேள்வி கேட்ட மக்களுக்கு, அவர் சொன்ன பதில் நேரடியானது.

‘இந்தியன் பார்ட் 2 ல் நடிப்பேன். வேற வழியில்ல. ஒரே நேரத்தில் இரண்டு குதிரையில் சவாரி செஞ்சுதான் ஆகணும்’. இப்படி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டாக பதிலளித்துவிட்டார் கமல்.

எப்படியும் ஆழ்வார்பேட்டை ஆண்டவர், அபிஷேகத்திற்கு தயாராகிவிடுவார் என்பதை முன் கூட்டியே உணர்ந்த வேறு கட்சி பிரமுகர்கள் சிலர், சந்து வழியாக தூது அனுப்பி வருகிறார்களாம். நாங்க உங்க கட்சிக்கு வந்தால் கட்சியை வழி நடத்த பல விதத்திலும் உதவியா இருப்போம் என்பதுதான் அது.

பாலிட்டிக்சுக்கே பனியன் மாட்டி விடற ஆளாச்சே கமல்? ‘வேறு கட்சி ஆட்கள் ஒருவர் கூட நம்ம கட்சிக்குள்ளே வந்திடக் கூடாது. கதவ இழுத்துப் பூட்டு’ என்று உத்தரவு போட்டுவிட்டாராம்.

நைசா உள்ள வர்றது. வந்த கொஞ்ச நாளில் குட்டையை குழப்பி நல்லாயிருந்த பில்டிங்கை இடிச்சுட்டு கிளம்பறதுங்கற சேம் சைட் கோல் பாலிடிக்ஸ், கமலிடம் எடுபடுமா என்ன?

Leave A Reply

Your email address will not be published.