அந்த அறிக்கை என்னுடையது அல்ல! கமல் சுறுசுறுப்பாக ஒரு மறுப்பு

0

கமல் மாதிரியே பேச வேண்டும் என்றால், ஹார்வேர்டு யுனிவர்சிடிக்கு போனாலும் நடக்காது. ஆனாலும் யாரோ ஒரு களவாணி அவரைப்போலவே யாருக்கும் புரியாத பாஷையில் ஒரு அறிக்கை வெளியிட்டு, கமல்ஹாசனுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிட்டா-ன். அல்லது “ஏற்படுத்திவிட்டாள்”

கவுதமி – மறக்க முடியாத ஒரு மரபு கவிதை என்று ஆரம்பித்த அந்த கடிதம், கமல் மொழியிலேயே எழுதப்பட்டிருந்ததுதான் குழப்பத்திற்கு முதல் காரணம். இரண்டாவது காரணம், கமலின் அதிகாரபூர்வமான மக்கள் தொடர்பாளரே அந்த கடிதத்தை ஷேர் செய்திருந்தது! பல ஊடகங்களில் அது அப்படியே வெளிவர, எப்படியோ வெகு சீக்கிரத்தில் உஷார் ஆகிவிட்டார் கமல்.

அவசரம் அவசரமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதற்கு ஒரு மறுப்பு வெளியிட்டிருக்கிறார். அதில் “இத்தருணத்த்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரீகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை”. என்று கூறியிருக்கிறார் கமல்.

சைபர் கிரைம் தானாகவே முன் வந்து இந்த விவகாரத்தை கையில் எடுத்து, முன்பு கமல் போலவே அறிக்கை வெளியிட்ட அந்த பேடியை கைது செய்யுமா?

To Listen Audio Click Below:-

Leave A Reply

Your email address will not be published.