கமலின் அதிமுக எதிர்ப்பும் 52 கோடி நஷ்டமும்!

5

எப்ப பார்த்தாலும் மு.க.ஸ்டாலின், ஓ. பன்னீர்செல்வம் என்று திட்டுவதற்கு ஒரே திசையை தேர்வு செய்து வைத்திருந்த சசிகலா அதிமுகவுக்கு சரியான பொழுதுபோக்காக சிக்கிவிட்டார் கமல். சின்னஞ்சிறு பேச்சாளர்கள் தொடங்கி மந்திரிமார்கள் வரை “கமலுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். அவர் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். கமலுக்கு அறிவு வேண்டும். மூளை வேண்டும். கிட்னி வேண்டும்” என்றெல்லாம் கொக்கரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதற்கு காரணம் கமல் சொன்ன ஒரு படீர் திடீர் விஷயம்தான். “ஆட்சிய உடனே கலைச்சுட்டு எலக்ஷன் வைக்கணும்” என்பது கமலின் கருத்து!

கமல் இவ்வளவு கோபப்பட என்ன காரணம்? ஒரு தனியார் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில் புட்டு புட்டு வைத்தார் அந்த பிளாஷ்பேக்கை. “என்னுடைய விஸ்வரூம் படத்தின் போது இவங்க பண்ணுன பிரச்சனையால் எனக்கு 52 கோடி ரூபாய் நஷ்டம். எந்த முஸ்லீம் அமைப்பும் விஸ்வரூபத்திற்கு எதிரா பிரச்சனை செய்யல. இதே வீட்டில் எனக்காக அவங்க துவா பண்ணிட்டு போனாங்க. வேற வழியில்ல. நாங்க என்ன பண்ணுறது? என்றும் வருந்தினார்கள். முஸ்லீம் அமைப்புகளின் பெயரில் அன்றைக்கு பிரச்சனை செய்தது ஜெயலலிதாதான்” என்றார் துணிச்சலாக!

சும்மா கிடந்தவரை தூண்டிவிட்டு, இன்னும் என்னவெல்லாம் பேச வைக்க போறங்களோ?

5 Comments
 1. Raj says

  சொந்த பிரச்சனைக்காக அரசியல் செய்கிறான் கமல் .

 2. அறிவுச்செல்வன் says

  கூத்தாடிகள் தமிழ்நாட்டை கெடுத்த வரையில் போதும். தமிழக மக்கள் விழித்து கொண்டார்கள். இனி அரசியலுக்கு வரும் கூத்தாடிகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஓட ஓடவிரட்டி அடிப்பார்கள்.

 3. Musthafa says

  கமல் ஒரு சுயநலக்காரன். தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாத விரக்தியில் வெளிநாடு செல்வேன் என்று சொன்னான். இப்போது இந்த ஆட்சி சரியில்லை என்று சொல்கிறான். ஆட்சி சரியில்லை என்பதே தமிழ்நாடு மக்கள் அனைவரின் கருத்தும். நடந்து கொண்டு இருக்கும் அதிமுக மாஃபியா கும்பல் ஆட்சி தூக்கி எறியப்படும். ஆனால் கமல் சொல்வது சுயநலம். .

 4. சேரன் says

  ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்கலாட்சாரத்தை மதிக்க தெரியாத கமல் போல அவனது ரசிகர்கள் வேண்டுமானால் அடுத்தவன் மனைவியோடு குடும்பம் நடத்தட்டும். ஆனால் அதை தமிழ்நாட்டுக்கு வெளியே நடத்தட்டும். இது தமிழ்நாடு தமிழ் காலாட்சாரப்படி வாழ்தல் வேண்டும்.
  தமிழன் டா

 5. முத்து says

  சினிமாக்காரர்களை மக்கள் செருப்பால் அடித்து விரட்டும் காலம் வந்து விட்டது. தமிழக மக்கள் எதிர்பார்ப்பது எல்லாம் தன்னலம் இல்லாத படித்த நேர்மையான பண்புள்ள அரசியல்வாதியை தான் மக்கள் எதிர்நோக்குகிறார்கள். அதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் கூத்தாடிகளை அரசியலில் நுழைந்து தமிழகத்தை மீண்டும் சுடுகாடாக்க வேண்டாம். கூத்தாடிகளுக்கு வாலிப வயதில் சினிமாவில் கட்டிப்பிடித்து ஆட்டம் போட்டு மக்களை குட்டிசுவார்க்கி வயதான பிறகு அரசியலில் குதித்து முதல்வர் ஆகி விடலாம் என்ற கனவு இனி பலிக்காது.

Leave A Reply

Your email address will not be published.