அட அங்க நிக்குறாரு கமல்!

0

‘மெர்சல்’ விவகாரம் தொடர்பாக முதல் சப்போர்ட் கமலிடமிருந்துதான் வந்தது. மேலே விழுந்து தேள் புடுங்கினாலும், இன்டஸ்ட்ரி கொஞ்சம் மெத்தனமாகதான் இருக்கும் என்று புரிந்து கொண்டாலும், ‘ரஜினி குரல் கொடுக்கலே… நடிகர் சங்கம் வாயை தொறக்கலே…’ என்று விஜய் ரசிகர்கள் முணுமுணுத்தார்கள். நடுநிலையாளர்களின் பார்வை முழுக்க ரஜினி வாய் திறக்கும் திருவிழாவுக்காக காத்திருந்தது. எப்படியோ… ரஜினி தன் குரலை பதிவு செய்துவிட்டார். ஆனால் வழக்கம் போல வழ வழா. கொழக் கொழவென! Important topic addressed… Well done !!! Congratulations team #Mersal என்று அவர் போட்ட ட்விட் மின்னல் வேகத்தில் பரவியது.

அதற்கு முன்பாக அதே நாளில் விஜய் அட்லீ சகிதம் மெர்சல் படம் பார்த்தார் கமல். படத்தில் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டால் இன்னும் கூட விரிவாக பேசலாம் அல்லவா? தன் வீட்டுக்கே வந்த விஜய் அட்லீயுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அப்போது பின்னணியில் வைக்கப்பட்டிருந்த அபூர்வ சகோதரர்கள் பட போஸ்டர்தான் இப்போது ஹைலைட். கமல் எவ்வளவு பெரிய புத்திசாலி என்பதற்கு இதுதான் உதாரணமும் கூட.

மெர்சல் படம், அபூர்வ சகோதரர்கள் படத்திலிருந்து உருவப்பட்டது என்கிற உண்மை ஊர் உலகத்திற்கு தெரிந்திருக்கிறது. ஊருக்கே தெரிந்த விஷயம் கமலுக்கு தெரியாதா? பொருத்தமாக ஒரு போஸ்டரை தயார் செய்து அது பின்னணியில் தெரிகிற இடத்தில் போட்டோவுக்கு போஸ் தருகிற அளவுக்கு திட்டமிட்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்க…. கமல் அரசியலுக்கு தகுதியானவரா? இல்லையா?

Leave A Reply

Your email address will not be published.