மீண்டும் காஞ்சனா! மிரட்டும் லாரன்ஸ்!

1

காபி தூள், பால், சர்க்கரை மூன்றும் சேர்ந்தால் காபி ரெடி! ஆனால் சரவண பவனில் ஒரு வித ருசியிலும், சந்திர பவனில் இன்னொரு வித ருசியாகவும் இருப்பது எப்படி? (நாக்கை கதற வைக்கிற ஹைவேஸ் ஓர கும்பகோணம் டிகிரி காபியை இந்த லிஸ்டில் வைக்கவே முடியாது. அது தனி அவஸ்தை) இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு அடித் தொண்டையை நனைத்துக் கொள்கிற அத்தனை பேருக்கும், லாரன்ஸ் ஃபார்முலா புரியுமா தெரியவில்லை.

பேய், திகில், மிரட்டல், கிராபிக்ஸ் என்று ஒரே ஃபார்முலாதான். ஆனால் லாரன்சுக்கு மட்டும் அது கை வந்த கொலை! ஒரே காஞ்சனாவை வைத்துக் கொண்டு அவர் கட்டி வரும் கல்லா, யுனிவர்சல் பேங்க் லாக்கரை கூட போட்டிக்கு அழைக்கும். அவ்வளவு ஃபுல்! அதுவும் காஞ்சனா 2 ஐ விட காஞ்சனா 3 க்கு அவ்வளவு ரெஸ்பான்ஸ் என்கிறது தியேட்டர் வட்டாரம். தமிழ்நாட்டில் 4 நாள் வசூல் 36 கோடி. ஆந்திராவில் 4 நாள் வசூல் 20 கோடி என்கிறார்கள்.

இத்தனைக்கும் இந்தப்படம் குறித்து வருகிற விமர்சனங்களில் எலி செத்த நாற்றம். எதுக்குய்யா லாரன்சு இப்படியெல்லாம்? என்று பொருமவும் செய்கிறார்கள். ஆனால் வசூல் நிலவரம் இப்படி இருக்கே அண்ணாச்சிகளா? பெண்கள், மற்றும் குழந்தைகள் புண்ணியத்தில் பேய் ஹிட் அடித்து வரும் காஞ்சனா 3 தன் அடுத்த அவதாரத்தை நோக்கி நகர்கிறது.

மீண்டும் லாரன்சை அழைத்து சன் பிக்சர்ஸ் காஞ்சனா 4 படத்திற்கு அட்வான்ஸ் கொடுத்துவிட்டதாம். இந்தப்படத்தின் பட்ஜெட் 100 கோடி. 3டி தொழில் நுட்பத்தில் தயாராகப் போகிறது. இதிலும் கோவை சரளா, ஸ்ரீமன் போன்ற நடிப்பிசை புலவர்கள் இருப்பார்கள்.

அதுதான் எல்லாத்தையும் விட பெரிய அதிர்ச்சி. ஹ்ம்ம்ம்!

1 Comment
  1. சீலன் says

    அவரிடம் காஞ்சனா_10 வரைக்கும் கதை உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.