ஏஞ்_சண்டாளனே_ஏதோ_ஆகுறனே! லவ்வர்ஸ் பார்த்துட்டு என்னென்னவோ ஆனீங்கன்னா கம்பெனி பொறுப்பல்ல!

0

மெலடிகள் மட்டும்தான் சாகா வரம் பெற்றவை என்பதை அவ்வப்போது வந்து காதில் கிசுகிசுத்துவிட்டு போகின்றன அநேக பாடல்கள். கொசுவின் ஆயுள்தான் குத்துப்பாடல்களின் வயசு என்பதை புரிந்து கொண்ட ஒரு சில இசையமைப்பாளர்கள், எப்பவும் மெலடி பக்கத்திலேயே நின்று காதுகளுக்கு அருள் பாலிக்கிறார்கள். அப்படியொரு இசையமைப்பாளராக காதுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர்.

கரிச்சான் குருவி படத்திற்காக அவர் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல், உங்களை கடத்திக் கொண்டு போவது நிச்சயம். ஒரு இனிமையான விஷயம். இந்தப் பாடலுக்காக மேக்கிங் வீடியோவை தாஜ்நூரே டைரக்ட் பண்ணியிருக்கிறார் என்பதுதான். இந்தப்பாடல் உருவான நேரத்தில், இதை அப்படியே படமாக்கலாம் என்று ஐடியா கொடுத்த தாஜ்நூர் அந்த பொறுப்பையும் தானே எடுத்துக் கொண்டாராம். படத்தின் ஹீரோயின் சுனு லட்சுமியையும், ஹீரோ சந்தோஷ் சரவணனையும் இசைக் கூடத்திற்கு வரவழைத்தவர் அவர்களையும் பர்பாமென்ஸ் கொடுக்க வைத்திருக்கிறார். சுனுலட்சுமியின் குறும்புகள்தான் எத்தனையெத்தனை அழகு. (காண்க வீடியோ)

கோபி ராமின் எடிட்டிங்குக்கு பின் கரிச்சான் குருவி இயக்குனர் கண்ணன் ராஜமாணிக்கத்திடம் இப்பாடலை போட்டுக் காட்ட, அப்படியே படத்தில் வைக்கலாம் போலிருக்கே என்று ஆனந்தப்பட்டாராம் அவர்.

வேல்முருகன், அலாபி பாலா பாடியிருக்கும் இந்தப்பாடலை நீங்களும்தான் கேட்டுப்பாருங்களேன்!

‘எஞ் சண்டாளனே…’ என்று தொடங்கும் இந்தப்பாடலை எழுதியவர் ஈழத்துக் கவிஞர் அஸ்மின். தமிழ்சினிமாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் இவர்தான் முன்னாள் முதல்வர் ஜெ. மறைவுக்காக ஒரு பாடலை உருவாக்கி அதை இன்றளவும் அவரது சமாதியில் ஒலிக்கும்படி செய்தவர். அந்தப் பாடலின் வெற்றிக்குப்பின் அஸ்மின் எழுதி, தாஜ்நூர் இசையமைத்திருக்கும் இந்தப்பாடல், காதலர்களை கொஞ்ச வைத்து தானும் கொஞ்சும் போலிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.