விட்டுக் கொடுக்காத கார்த்தி விஷால்! பிரபுதேவா எரிச்சல்!

0

கிருஷ்ணாவும் விஜய் சேதுபதியும் ஒரு படத்தில் இணைந்து நடித்தார்கள். ஷோ கேஸ்சில் பளபளப்பாக இருந்தது விஜய் சேதுபதி மார்க்கெட். -ஆனால் கிருஷ்ணாவுக்கு போஸ்டர் ஒட்டக்கூட ஆளில்லை. இருந்தாலும், டைரக்டரை தொணப்பி எடுத்துவிட்டார். ‘படத்தில் எனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஈக்குவலா சீன் இருக்கணும். இல்லன்னா தொலைச்சுப்புடுவேன்’ என்று மிரட்டாத குறை. அப்புறம்? கிருஷ்ணா என்ற ‘ஓவர் ஆக்டிங்’ பையனால் படமே துவம்சம்!

கிட்டதட்ட அப்படியொரு துர்பாக்கிய நிலைக்கு படத்தை துவங்கிய மூன்றாம் நாளே ஆளாக்கப்பட்டார் பிரபுதேவா. ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் கார்த்தியும் விஷாலும்தான் ஹீரோக்கள். இவருக்கு தெரியாமல் அவரும், அவருக்கு தெரியாமல் இவரும் பிரபுதேவாவை அப்ரோச் செய்து, “என் கேரக்டரை எப்படி டிசைன் பண்ணியிருக்கீங்க. ஒரு சீன் விடாம சொல்லுங்க” என்று தொணப்பி எடுக்க… ‘விட்டா கருவாட்டுக்கு கலர் அடிச்சு கனகாம்பரம்னு விற்க சொல்லுவாய்ங்க போலிருக்கே?’ என்று பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டார் மாஸ்டர்.

சொல்லாமல் கொள்ளாமல் மும்பைக்கு போன மாஸ்டர், அதே வேகத்தில் தயாரிப்பாளர் ஐசரிகணேஷுக்கு மெசேஜ் தட்டிவிட்டாராம். என்னவென்று? படம் ‘டிராப்’ என்று!

கருப்பு வெள்ளைக்கு கொடுத்த கால்ஷீட் தேதிகளை சண்டக்கோழி பார்ட் 2 வுக்கு கொடுத்திருக்கிறார் விஷால். கார்த்தியும் அதே வேகத்தில் இன்னொரு படத்திற்கு சைன் பண்ணும் முடிவிலிருக்கிறார்.

நடுவுல மாஸ்டருக்குதான் ஆயிரம் வேல இருக்கே?

Leave A Reply

Your email address will not be published.